சுக்கிரனின் ராசி மாற்றம் மே 23 அன்று இரவு 08:39 மணிக்கு நிகழ்ந்துள்ளது. அதன்படி தற்போது மீன ராசியை விட்டு சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார். மேலும் ஜூன் 18 ஆம் தேதி காலை 08:15 மணி வரை சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார் அதன் பிறகு சுக்கிரன் ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார். சுக்கிரன் கிரகம் பொருள் இன்பங்களுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. இதனால் செல்வம், சுகம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். எனவே சுக்கிரன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: சுக்கிரனின் ராசி மாற்றத்தால் வெற்றி பெறுவீர்கள். காதல் பெருகும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் அரங்கேறும். காதல் திருமண யோகமும் உண்டு. இந்த நேரத்தில் கூட்டாண்மையுடன் புதிய தொழில் செய்ய வேண்டாம். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கலாம். 


மேலும் படிக்க | திருமண தடைகள் நீங்கி, விரைவில் நாதஸ்வரம் ஒலிக்க சில எளிய பரிகாரங்கள் 


ரிஷபம்: சுக்கிரனின் பெயர்ச்சி உங்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும். மே 23 முதல் ஜூன் 18 வரை ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், உடல்நிலை மோசமடையலாம். மகிழ்ச்சி மற்றும் ஆடம்பர விஷயங்களில் செலவு செய்வது நிதி நிலைமையை மோசமாக்கும். இருப்பினும், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கலாம். சில நல்ல செய்திகள் கிடைக்கலாம்.


மிதுனம்: சுக்கிரனின் ராசி மாற்றம் உங்கள் விதியில் மாற்றத்தை நிரூபிக்கும், வெற்றியை பெறுவீர்கள். காதல் திருமண யோகம் உண்டாகும். கல்விப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளிடமிருந்து பாரட்டுகளை பெறலாம்.


கடகம்: மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால் அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி, கௌரவம் கூடும். இது உங்கள் நிதி பக்கத்தை பலப்படுத்தும். புதிய வாகனம் வாங்கலாம். வெளிநாட்டில் வேலை அல்லது குடியேறும் முயற்சிகள் வெற்றி தரும். 


சிம்மம்: சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கப் போகிறது. சரியான முடிவினால் முன்னேற்றம் ஏற்பட்டு புகழும் கூடும். நீங்கள் ஏதேனும் அரசாங்க வேலை பெற விரும்பினால், இது உங்களுக்கான சரியான நேரம். மத வேலைகளில் ஈடுபடுவீர்கள்.


கன்னி: உங்கள் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கம் கலந்திருக்கும். உங்களின் பதவி, கௌரவம் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் எந்த ஒரு சொத்தையும் விற்க வேண்டாம், இழப்பு ஏற்படலாம்.


துலாம்: சுக்கிரனால் உங்கள் ராசிக்காரர்களின் திருமணம் அமையும். நீங்கள் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதுவே உங்களுக்கு சரியான நேரம். கல்விப் போட்டித் துறையில் சாதகமான காலம் இது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரலாம், வாக்குவாதங்களை தவிர்க்கவும். 


விருச்சிகம்: உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும், கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் நல்ல செய்தி கிடைக்கும். இப்போது நீங்கள் கல்விப் போட்டித் துறையில் கடினமாக உழைக்க வேண்டும். வீடு, வாகனம் வாங்க வங்கியில் கடன் வாங்க நினைத்தால் அதில் வெற்றி கிடைக்கும்.


தனுசு: சுக்கிரனின் ராசி மாற்றம் உங்கள் விதியை மாற்றும். நீங்கள் ஒரு புதிய வேலை அல்லது புதிய வியாபாரத்தில் வெற்றி பெற முடியும். நீங்கள் காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கல்விப் போட்டியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியுடன் சிறந்த உறவைப் பேணுவார்கள்.


மகரம்: சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களுக்கு நற்செய்தியைத் தரப் போகிறது. வீடு, வாகனம் வாங்க நினைத்தால் அதில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன், அதை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.


கும்பம்: சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பை அளிக்கும். வெளிநாட்டில் வேலை அல்லது குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் இது. இந்த நேரத்தில் உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும்.


மீனம்: மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகுவதால் நிதிநிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக சதி நடக்கலாம், சற்று கவனமாக இருக்க வேண்டும். கொடுத்த பணம் திரும்ப பெறலாம். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR