Love Symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்கள் என்று அர்த்தம்!
20ஸ் முதல் 60ஸ் வரை காதல் என்பது மாறாத ஒரு விஷயம். அப்படி நீங்கள் ஒருவரை உண்மையிலேயே காதலிக்கிறீர்கள் என எப்படி கண்டுபிடிப்பது.
காதல், யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், சிலருக்கு தான் காதலில் விழுந்து விட்டோம் என்கிற விஷயமே கொஞ்சம் தாமதாமாகத்தான் புரிகிறது. அப்படி நீங்கள் காதலில் உள்ளீர்கள் என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.
காதல் உணர்வு வந்துவிட்டாலே தலை கால் புரியாது என பொதுவாக கூறுவார்கள்.“சொன்னால்தான் காதலா…” என பாட்டுப்பாடிய 80’ஸ் 90’ஸ் கிட்ஸ்களின் காலம் மலையேறி, இப்போது பொதுவெளியில் “சொல்லுங்க மாமாக்குட்டி..” என 2K கிட்ஸ் தங்களது அன்புக்குரியவரை அழைக்கும் காலம் வந்தாச்சு. காதலை வெளிப்படுத்தும் விதங்களும் காதலின் தன்மையும் தலைமுறைக்கு தலைமுறை வேறுபடுமே அன்றி, காதல் எப்போதும் அப்படியேத்தான் இருக்கும்.
காதலின் அறிகுறிகள்:
நம்மில் பலர், காதலின் அறிகுறிகள் தெரியாமல் தடுமாறுவதுண்டு. உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒருவரை பிடித்துள்ளது என வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் மேல் இருப்பது வெரும் நட்பா? அல்லது காதலா என சிலநேரம் குழப்பத்தில் இருப்பீர்கள். இது வீண் யோசனைகளையும் மனக்குழப்பத்தையும்தான் உண்டாக்கும். இதைத் தவிர்ப்பதற்காக இங்கே காதலின் அறிகுறிகள் சில கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நீங்கள் உண்மையாகவே அந்த நபரின் மீது காதலில் விழுந்துள்ளீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போதும் உங்கள் நினைவில் இருப்பார்
உங்களுக்கு பிடித்த அந்த நபரைப்பற்றி எப்போதும் நீங்கள் நினைத்துக்கொண்டே இருப்பீர்கள். உங்கள் நாள் முழுவதும் நீங்கள் தலைக்கு மேல் வேலைையை வைத்துக்கொண்டு நீங்கள் பிசியாக இருந்தாலும் சரி, அந்த நாளில் உங்களுக்கு எந்த வேலையும் இல்லாவிட்டாலும் சரி. அந்த நபர் குறித்த ஏதாவது ஒரு விஷயம் உங்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இது, மூளையில் உள்ள டோபோமைன் என்ற ஒரு வகை ரசாயணத்தை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் நீங்கள் அவரைப்பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.
மேலும் படிக்க | ஆன்லைனில் டேட்டிங் ஆப் யூஸ் பண்றிங்களா? உங்களுக்கான ஒரு எச்சரிக்கை!
எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பீர்கள்..
உங்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் ஆரம்பத்தில் அவரிடம் இருக்கும் குறைகள் எதுவும் உங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் ஈர்க்கப்பட்ட ஒரு ஆண், உங்களிடம் தற்கொலை ஜோக் தங்கதுரை போல எந்த கடி ஜோக் கூறினாலும் உங்களுக்கு அது சிரிப்பைத்தான் மூட்டும். நீங்கள் அதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு நகைச்சுவையான மனிதரை உங்கள் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
தூக்கத்திற்கு பை-பை
“பாலும் கசந்ததடி சகியே…படுக்கையும் நொந்ததடி சகியே..” என்ற பழந்தமிழ் பாடலைக் கேட்டதுண்டா? இதுதான் புதிதாக காதலில் விழுந்தவர்களின் நிலைமையும். காதல் வந்தவுடன் இரவில் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு கொட்டாவி கூட விடாமல் கனவுலகில் மூழ்கியிருப்பர்.
அவர்கள் மட்டும்தான் கண்களுக்கு தெரிவார்கள்..
ஆயிரம் பேர் இருக்கும் இடத்திலும் உங்கள் கண்கள் அவர்களை மட்டுமே தேடிக்கொண்டிருக்கும். எத்தனை அழகான பெண்கள்/ஆண்கள் உங்களை சுற்றி இருந்தாலும் உங்களுக்கு ‘அந்த’ நபர் மட்டும் கொள்ளை அழகாக தெரிவார்கள். அவர்களுக்கும் உங்கள் மேல் விருப்பம் இருந்தால் வழக்கமான லுக்கை விட உங்களை சந்திக்க வரும்போது கொஞ்சம் கூடுதலாக அலங்காரம் செய்திருப்பார்கள்.
அவர்களின் மகிழ்ச்சி உங்களுக்கு முக்கியமாக தெரியும்
உங்கள் மனதிற்கு பிடித்தவரின் பிறந்தநாளிற்காக அவர்களை விட நீங்கள்தான் அதிகமான ஆவலோடு காத்துக்கொண்டிருப்பீர்கள். அவரை மகிழ்விக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். அவர் குறித்த விஷயங்களை முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகு, அவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை அடிக்கடி செய்வது அவர் எப்போதுமே இது போல சிரித்துக்கொண்டிருக்க வேண்டும் என மனதிற்குள் வேண்டிக்கொள்வது..எல்லாமே காதலுக்கான அறிகுறிதான்.