மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே வாழ்வில் கடினமான தருணங்கள் வந்து செல்லாமல் இருக்காது. இந்த சமயங்களில் நம்முடன் யாருமே இல்லாதது போலவும், இந்த போராட்டங்களை கடந்து போக, நம்மை தவிர வேறு யாரும் நம்முடன் இல்லாதது போன்ற உணர்வும் ஏற்படும். இந்த சமயங்களில் நாம் சில விஷயங்களை நினைத்து பார்ப்பது மிகவும் அவசியம். இதுவரை நாம் கடந்து வந்த பாதையில், இப்போது போல பல கடினமான தருணங்களை எதிர்கொண்டிருப்போம். அப்போதெல்லாம் நம்முடன் இருந்த நபர் யார் என திரும்பி பார்த்தால் நமக்கான தோழனாக, நாம் மட்டுமே இருந்திருப்போம். இப்போதும் அதே போன்ற ஒரு தருணம்தான். இப்படி, நம்மை கடுமையாக யோசிக்க வைக்கும் தருணங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நன்றியறிதல்:


தினமும், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அல்லது நடந்த ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை டைரியில் எழுதுங்கள். அது, உங்களை பார்த்து யாரேனும் ஒருவர் சிரித்ததாக இருக்கலாம், ஒருவர் உங்களிடம் ஒரு முறை அன்பாக நடந்து கொண்டதாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் அதை நாட்குறிப்பில் எழுதுங்கள். இப்படி நீங்கள் தினமும் எழுதினால், நீங்களே உங்கள் வாழ்க்கையை நெகடிவாக பார்ப்பதை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். 


உடற்பயிற்சி:


உடற்பயிற்சி என்றால், வியர்த்துப்போகும் அளவிற்கு ஓடி, ஆடி உடலுக்கு உழைப்பு கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒரு வகையில் உதவி புரியும் என்றாலும், அதற்கு மாற்றாக சில மைல் தூரம் நடப்பது, வேடிக்கை பார்த்துக்கொண்டே பார்கில் சைக்கில் ஓட்டுவது போன்ற விஷயங்களும் உங்கள் மனநிலையை மேம்படுத்தும். இது, உங்கள் உடலில் இருக்கும் என்டார்பின்ஸ் ஹார்மோன்ஸ் லேவலை அதிகரிக்கும். 


மேலும் படிக்க | மன நலம் முதல் உடல் நலம் வரை... பயணம் செய்வதால் ஏற்படும் எக்கச்சக்க நன்மைகள்..!!


பிறருடன் உரையாடுதல்:


நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் பாரத்தை பிறரிடம் கூறினால் அது பாதியாகும் என பலர் சொல்லி கேட்டிருபோம். ஆனால், பலருக்கு அப்படி யாரிடமும் சென்று சில விஷயங்களை சொல்ல இயலாது. நீங்கள் பிறருடன் உரையாடும் போது உங்கள் மனதில் இருப்பதை கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுடன் அப்படியே அமர்ந்து அன்றைய நாள் குறித்து பேசலாம். அவர்கள் நாளின் ஹைலைட் என்ன என்று கேட்கலாம். ஏதேனும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதை செய்தாலே, “இதுவும் கடந்து போகும்” என்ற எண்ணம் மேலோங்கும். 


தியானம்:


தியானம் செய்ய காலை அல்லது மாலைதான் நல்ல நேரம் என்பது கிடையாது. உங்களுக்கு எப்போதெல்லாம் மனம் பாரமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் அமர்ந்து தியானம் செய்யலாம். அந்த நேரம், உங்களுடன் நீங்கள் பேசும் நேரமாகும். இது, உங்களுக்குள் நீங்களே அபரிபிதமான புரிதலை ஏற்படுத்திக்கொள்ள உதவும். 


இசை கேட்பது:


“இரவில் இளையராஜாவின் இசையை கேட்டாலே போதும். மனம் எல்லாம் லேசாகும்” என சிலர் சொல்வதை கேட்டிருப்போம். சிலருக்கு இளையராஜா, சிலருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், இன்னும் சிலருக்கு யுவன் சங்கர் ராஜா. அப்படி யார் பாடலும் பிடிக்கவில்லை என்றால் ஏதேனும் பொதுவான ஒரு இசை. இதை கேட்டுக்கொண்டு அப்படியே கண்களை மூடுங்கள். மனம் லேசாகலாம், அல்லது வைத்திருந்த பாரங்கள் கொஞ்சமாக குறைந்தது போன்ற உணர்வு ஏற்படலாம். 


மேலும் படிக்க | Mental Peace மோசமா இருக்கா.... இந்த உணவுகள் உங்களை தோனி போல் கூலாக்கும்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ