கிரிகெட் ஜாம்பவான் டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110 வது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் டூடுலில் வெளியிட்டு மரியாதையை செலுத்தியுள்ளது...!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110 வது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் டூடுலில் வெளியிட்டு மரியாதையை செலுத்தியுள்ளது...!
கிரிக்கெட் உலகு வரலாற்றில் மிக முக்கியமான ஜாம்பவான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன். கிரிக்கெட்டின் பெரும் சாதனையாளரான டான் பிராட்மேனின் சாதனையை இன்று வரை யாராலும் மேரியடிக்க முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலில் ஒரே நாளில் 309 ரன்கள் அடித்த பெருமை பிராட்மேனை மட்டுமே சேரும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
கடந்த 1928 ஆம் ஆண்டில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய பிராட்மேன் ஏறக்குறைய 20 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், சுமார் 37 போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் விளையாடி 6,996 ரன்கள் குவித்தார். அவரது பேட்டிங் சராசரி பிரமிக்கவைக்கும் வகையில் 99.96 ஆக உள்ளது. இந்தச் சாதனையை இப்போதும் கூட பிராட்மேனின் பேட்டிங் சராசரியை யாராலும் இன்னும் நெருங்க முடியவில்லை.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மன்னனாக திகழ்ந்த பிராட்மேனின் மிகப்பெரிய சாதனை, அவரின் சராசரியாகும். இவரின் சராசரி வரலாற்றி எந்த பேட்ஸ்மேனும் நெருங்க முடியாத அளவு 99.94 ஆகும்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் தனது 92 வது வயதில் உயிரிழந்தார். இன்று இவரின் 110 வது பிறந்தநாளாகும். இவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக டான் பிராட்மேன் கருதப்படுகிறார். இவருக்கு பின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றவர் இந்திய ஜாம்பவான் சச்சின்.
கிரிகெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110 வது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் தனது டூடுலில் வைத்து கொண்டாடியுள்ளது...!