Money Tips: ₹15,000 முதலீட்டில் நேந்திரம் பழ தூள் தயாரித்து ஆயிரங்களை அள்ளலாம்!
சிறு வணிக யோசனை: சிறிய அளவிலான தொழிலில், குறைந்த முதலீட்டில் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் தொழிலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவரும் வேலைக்கு சென்றால் தான் தாக்குபிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. வேலை கிடைப்பதும் அத்தனை எளிதாகவும் இல்லை. இந்நிலையில், சிலர் வேலையுடன் பலர் வியாபாரமும் செய்து வருகின்றனர் (Small Business Idea). வீட்டில் இருக்கும் பெண்களும் செய்யும் எளிதான் தொழில் இருந்தால், பணம் சம்பாதிப்பது எளிது. அதில் ஒன்று நேந்திரம் பழ மாவு வியாபாரம். இதற்கு உங்களுக்கு வாழைப்பழம் தேவைப்படும். இந்த தொழிலை தொடங்க, சுமார் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
இந்த வணிகத்திற்கு உங்களுக்கு இரண்டு இயந்திரங்கள் தேவைப்படும். நேந்திரம் பழத்தை உலர்த்தும் முதல் இயந்திரம் (Dryer Machine) இரண்டாவது நேந்திரம் பழத்தூள் அதாவது மாவு (Mixture Machine) தயாரிக்கும் இயந்திரம். இந்த இயந்திரங்களை உங்கள் அருகிலுள்ள சந்தையில் அல்லது ஆன்லைனில் எளிதாக வாங்கலாம்.
நேந்திரம் பழத்தை பொடி செய்ய முதலில் நேந்திரம் பழத்தையை சோடியம் ஹைபோகுளோரைடு கரைசலில் சுத்தம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, அதன் தோலை அகற்றவும். இப்போது உடனடியாக சிட்ரிக் அமிலக் கரைசலில் 5 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது நேந்திரம் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது இந்த துண்டுகளை 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 24 மணி நேரம் வெப்ப காற்று அடுப்பில் உலர வைக்கவும். நேந்திரம் பழத் துண்டுகள் நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்து பொடியாக மாற்றவும்.
மேலும் படிக்க | விரைவில் பணக்காரர் ஆக வேண்டுமா..? இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் போதும்..!
நேந்திரம் பழ மாவை பாலித்தீன் பைகள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கலாம். அதன் செலவு மிகவும் குறைவாக இருக்கும். நேந்திரம் பழ மாவு சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். சந்தையில் நேந்திரம் பழ மாவை கிலோ ரூ.800 முதல் 1000 வரை எளிதாக விற்கலாம். அதாவது, தினமும் 5 கிலோ வாழை மாவு விற்பனை செய்தால், நாளொன்றுக்கு ரூ.3500 முதல் 4500 வரை லாபம் ஈட்டலாம்.
நேந்திரம் பழத்தில் பல நன்மைகள் உள்ளன, அது உங்கள் BP அளவைக் குறைக்கும். இது உங்கள் குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம், உங்கள் செரிமான சக்தியும் நன்றாக இருக்கும், மேலும் இது உங்கள் சருமத்தை அழகாக வைத்திருக்கும்.
மேலும் படிக்க | விபத்தை தடுக்க ரயில்களில் கவாச் சிஸ்டம்... டெண்டர் வெளியிட ரயில்வே முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ