பாலியல் வாழ்க்கையில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலைப்படும் ஆண்களுக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கும்....!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மது என்ற சொல்லை கேட்டாலே "மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு" என்ற வாசகம் தான் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும். அதிலும், பெண்களுக்கு மது அருந்தும் ஆண்களை விரும்பவும் மாட்டார்கள். குறிப்பாக மது பாலியல் வாழ்க்கையில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நம் அனைவரது மனதிலும் ஆழமாக பதிந்துள்ள விஷயம். ஆனால், வழக்கமான இந்த நம்பிக்கைக்கு மாறாக, பாதுகாப்பான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு படுக்கையறையில் ஆண்களின் செயல்திறனை ஆல்கஹால் மேம்படுகிறது, என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.


இந்த கண்டுபிடிப்பு அவர்களின் பாலியல் வாழ்க்கையில் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலைப்படும் ஆண்களுக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கும். மது உட்கொள்வது விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த குறைபாடு பொதுவாக “ப்ரூவர்ஸ் ட்ரூப்” (Brewer’s droop) என்று அழைக்கப்படுகிறது. 1,580 ஆஸ்திரேலிய ஆண்கள் மீதான ஒரு ஆய்வு தலைகீழ் உண்மை ஒன்றை காட்டியது.  மது அருந்துபவர்கள் மது அருந்தாதவர்களை விட 30 சதவீதம் குறைவான பிரச்சினைகளை தெரிவிக்கின்றனர்.


ALSO READ | பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா?


“பாதுகாப்பான வழிகாட்டுதல்களுக்குள் மது அருந்தும் ஆண்கள் மதுவைத் தொடாதவர்களுடன் ஒப்பிடும் போது அதிகப்படியான  விறைப்புத்தன்மையைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.” மேற்கு ஆஸ்திரேலியாவின் கியோக் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் ரிசர்ச்சின் முன்னணி ஆய்வு ஆசிரியர் கியூ-கிம் செவ் இதனை  மேற்கோளிட்டுள்ளார். அதிகப்படியாக மது அருந்துபவர்கள் ஒருபோதும் மது குடிக்காதவர்களைக் காட்டிலும் குறைவான செயலிழப்பு விகிதங்களைக் கொண்டிருந்தனர்.  


இருப்பினும் இந்த வகை குடிப்பழக்கம் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறியுள்ளது. வழிகாட்டுதல்களுக்கு வெளியே குடிப்பவர்கள் உட்பட சில மக்கள் சில ஆல்கஹால் மூலம் பயனடைகிறார்கள். சமீபத்திய கண்டுபிடிப்பு, தற்போதைய அல்லது கடந்தகால குடிப்பழக்கத்தைப் பற்றி “குற்ற உணர்ச்சியையும் மன அழுத்தத்தையும்” உணருவதன் மூலம் பிரச்சினையை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும், என்றார்.


பிற ஆபத்து காரணிகள் விலக்கப்பட்ட பின்னர், வார இறுதி குடிகாரர்கள், அதிக ஆபத்துள்ள குடிகாரர்கள் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளும் வழிகாட்டுதல்களை மீறியவர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவாக குடித்தவர்களைக் காட்டிலும் குறைவான விறைப்புத்தன்மையைக் கொண்டிருந்தனர். எவ்வாறாயினும்,  குடிப்பழக்கத்தை விட்டவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.