பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா?

வாழ்க்கையின் ஆரம்பத்தில் மலட்டுத்தன்மையுள்ள ஆண்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண்களின் உடல் வளர்ச்சியும், இனப்பெருக்க திறனும் அதிகரித்தாலும் ஆயுட்காலம் குறைகிறது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2020, 11:50 PM IST
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்புகளின் நீண்டகால விளைவுகளைப் பற்றிய ஆய்வு இது
  • இந்த ஆராய்ச்சியில், கர்ப்பம், பாலூட்டுதல் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை
  • ஆண்கள் தங்கள் பாலியல் துணையின் ஆயுட்காலம், வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கின்றனர்
  • சில வகையிலான பூச்சிகளில் இந்த விளைவுகள் ஏற்படுவதை முந்தைய ஆய்வுகள் வெளிப்படுத்தின
  • எலிகளில் இனச்சேர்க்கைக்கு ஒரு தெளிவான உடலியல் பதிலை இந்த ஆய்வு கொடுத்துள்ளது
  பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா? title=

ஓடாகோ பல்கலைக்கழகத்தின் தலைமையிலான பாலியல் துணை தொடர்பான ஆய்வு அமெரிக்க அறிவியல் இதழான பி.என்.ஏ.எஸ் (American science journal PNAS) சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகளானது, வாழ்க்கையின் ஆரம்பத்தில் மலட்டுத்தன்மையுள்ள ஆண்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண்களின் வளர்ச்சியும், இனப்பெருக்க உற்பத்தியும் அதிகரிக்கிறது என்று காட்டுகிறது. ஆனால், இது பெண்களின் ஆயுட்காலத்தை குறைக்கிறது என்றும் கூறுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் விலங்கு இனப்பெருக்கம், ஐவிஎஃப் மற்றும் இனப்பெருக்கத்தின் வெவ்வேறு அம்சங்களை புரிந்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டன என்று உடற்கூறியல் துறையைச் சேர்ந்த எழுத்தாளர் டாக்டர் மைக்கேல் காரட் கூறுகிறார். 

ALSO READ | அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் நேவிகேஷன் சாட்டிலைட்

இந்த ஆராய்ச்சியில் மலட்டுத்தன்மையுள்ள ஆண் எலிகளுக்கு இணையாக பயன்படுத்தப்பட்ட பெண் எலிகள் பெரிதாக வளர்ந்தன ஆனால் குறுகிய காலமே உயிர் வாழ்ந்தன என்பதை ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. அந்தப் பெண் எலிகள் பிறகு மலட்டுத்தன்மையில்லாத வளமான எலிகளுடன் இணைந்தபோது அதிக சந்ததிகளை உருவாக்கின.

ஆண்களுடனான தொடர்புகளின் எந்த கூறுகள் பெண்களின் வாழ்க்கையின் போக்கையும், இனப்பெருக்கத்தையும் ஆயுளையும்  எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தெரிந்துக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  உடற்கூறியல் துறை மற்றும் UNSW Sydneyயில் சிலருடன் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் காரட் இவ்வாறு கூறுகிறார்: "ஆண்கள் தங்கள் பாலியல் துணையின் ஆயுட்காலம், வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கின்றனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. இதுவரை, இந்த விளைவுகளில் பெரும்பாலானவை கர்ப்பத்தின் விளைவுகள், குழந்தைகளைப் பெற்றெடுப்பது மற்றும் கவனித்துக்கொள்வது போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டன" என்று டாக்டர் காரட் கூறுகிறார்.

ALSO READ | தீவிர புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை COVID-19 அபாயத்தை அதிகரிக்காது

"இந்த ஆராய்ச்சியானது, கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்புகளின் நீண்டகால விளைவுகளைப் பற்றிய ஆய்வாக இது இருந்தது" என்று டாக்டர் காரட் விளக்குகிறார்.

"சில வகையிலான பூச்சிகளில் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை நாங்கள் முன்னரே அறிந்திருந்தோம், ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் பல மாதங்களுக்கு பதிலாக பல ஆண்டுகள் வாழும் பாலூட்டிகளுக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை. இது விலங்களுக்கு செயற்கை கருவூட்டுவது மற்றும் மனிதர்களுக்கான செயற்கை கருவூட்டலிலும் கூட முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்" என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ALSO READ | 174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?

"ஆராய்ச்சியின் மிக ஆச்சரியமான முடிவுகளில் ஒன்று, வாழ்க்கையின் ஆரம்பத்தில் மலட்டுத்தன்மையுள்ள ஆண்களுடன் இனச்சேர்க்கை செய்த பிறகு  பெண் எலிகளுக்கு இனப்பெருக்க உற்பத்தி அதிகரித்தது. ஆனால்,  வளமான ஆண்களுடன் இனச்சேர்க்கை செய்வதில் அதன் விளைவுகள் எதிரொலித்தன" என்று யு.என்.எஸ்.டபிள்யூ சிட்னியைச் சேர்ந்த பேராசிரியர் ராப் ப்ரூக்ஸ் கூறுகிறார்.

"இனச்சேர்க்கை மற்றும் கருத்தரித்தல் ஆகியவற்றின் குறிப்பிட்ட அம்சங்களுக்கு மாறுபட்ட பதில்கள் இருப்பதாக இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது, இது அடுத்தடுத்த இனப்பெருக்க உற்பத்தியை வெவ்வேறு திசைகளில் மாற்றுவதற்கான முக்கிய அம்சமாக இருக்கலாம்" என்று பேராசிரியர் புரூக்ஸ் கூறுகிறார்.

ALSO READ | கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மனைவி செய்த தவறின் விலை என்ன?

எலிகள் பற்றிய நமது ஆய்வு, எதிர்பாராத வழிகளில் மனித இனச்சேர்க்கை நடத்தையிலும் தென்படலாம். பெண்களை பிற்காலத்தில் சிறந்த இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்துவதற்கு  இந்த ஆய்வு உதவுமா என்பது நமக்குத் தெரியாது. 

எலிகள் மற்றும் மனிதர்கள் இனச்சேர்க்கையில் பல முக்கியமான வேறுபாடுகள் உள்ளன என்று டாக்டர் காரட் விளக்குகிறார். எடுத்துக்காட்டாக, எலிகள் மலட்டு எலிகளுடன் இனச்சேர்க்கை செய்த பிறகு செயற்கை கர்ப்பத்தின் மூலம் செய்யலாம். அதே நேரத்தில் மனிதர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். தற்போது, எலிகளில் இனச்சேர்க்கைக்கு ஒரு தெளிவான உடலியல் பதில் வந்துள்ளது, அவை மனிதர்களுக்கு உகந்ததாக இல்லாமல் போகலாம். இருப்பினும், இனச்சேர்க்கைக்கான இந்த பதில் குறிப்பிட்ட ஹார்மோன் எவ்வாறு மாறுகிறது என்பதற்கான நுண்ணறிவை வழங்கக்கூடும். கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்குமா என்பது போன்ற விஷயங்களுக்கும் இந்த ஆராய்ச்சி பயன்படலாம். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளானது மனிதர்களுக்கான சுகாதார ஆய்வுகளில் ஒரு  குறிப்பிட்ட பங்களிக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.    

Trending News