Healthy Snacks: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஹெல்தி ஸ்நாக்ஸ் உணவுகளை ட்ரை பண்ணுங்க..!
Healthy Diet Snacks: நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த ஹெல்தி ஸ்னாக்ஸ் உணவுகளை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
நம் அனைவரும் உடல் எடையை குறைக்க என்னென்னவோ முயற்சிகளை மேற்கொள்கின்றோம். அதில் ஒரு சில முயற்சிகள் பயணளிக்கும் ஒரு சில, கிணற்றில் போட்ட கல் போல கிடக்கும். இதற்கு காரணம், டயட் இருக்கிறேன் என்ற பெயரில் நாம் இடையிடையே கொரிக்கும் ஸ்னாக்ஸ் உணவுகள்தான். ஆனால், அதைப்பற்றி இனி கவலை இல்லை. ஹெல்தியான நொருக்கு தீனிகளை வீட்டிலேயே தயாரித்தும் நாம் சாப்பிடலாம்.
கலவையான நட்ஸ் வகைகள்:
ஆரோக்கியமான நட்ஸ் வகைகளை நாம் ஸ்னாக்ஸ் ஆகாவும் உட்கொள்ளலாம். இது, நம் உடலுக்கு ஹெல்தியான புரதச் சத்தையும், நல்ல கொழுப்பையும் தரும். டயட்டுடன் தினமும் சிறிதளவு நட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடையும் குறையும் என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வெள்ளரிக்காயுடன் ஹம்மஸ் ஸ்நாக்ஸ்:
நீர்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்று, வெள்ளரிக்காய். வெயில் காலத்தில் தாகத்திற்காக மட்டுமல்ல, சமயத்தில் ஸ்னாக்ஸ் ஆகவும் இதை சாப்பிடலாம். எப்படி தெரியுமா? ஹம்மஸ் எனப்படும் அரேபிய சாஸ் வேகவைத்த சுண்டல், எலுமிச்சை, பூண்டு, இன்னும் பல ஆரோக்கியமான பொருட்களை வைத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளரிக்காயை இதனுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை, அம்புட்டு ஜோர்-ஆரோக்கியத்திற்கும் எந்த கெடுதலும் வராது. மேலும் வெள்ளரிக்காய் கொழுப்பை கரைக்க உதவும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஹாஃப் பாயில் முட்டைகள்:
முட்டையில் புரத சத்து அதிகமாகவே இருக்கும். டயட் இருக்கும் சமயங்களில் பசியை கட்டுப்படுத்தவும் தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்ளவும் இது உதவும். முட்டையை ஹாஃப் பாயில் போட்டி சிறிதளவு உப்பு மஞ்சள் மற்றும் மிளகுதூள் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | பெண்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் அத்தி பழம்
உப்பு கடலை:
ரயில் பயணங்களின் போதும், எங்கேயாவது நெடுந்தூரம் பயணிக்கும் போதும் நாம் உப்புக்கடலையை கொரித்துக்கொண்டே போவோம். ஆனால், அதில் எவ்வளவு பயண் உள்ளது என்பது நமக்கு தெரியாமலேயே இருந்திருக்கும். உப்புக்கடலை, நீரிழிவு குறைபாட்டினை தடுக்கிறது. உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. பசியையும் உப்புக்கடலை கட்டுப்படுத்தும். அதிலும், கருப்பு கொண்டை கடலையில் எண்ணெய் சேர்காமல் உப்பு மட்டும் சேர்த்து கொஞ்சம் வெங்காயம், தக்காளி தூவி சாப்பிட்டால் சுவையான-ஹெல்தியான ஸ்னாக்ஸ் தயார்.
முளைகட்டிய பயிர்:
காலை உணவிற்கு பதிலாக கூட முளை கட்டிய பயிறை சாப்பிடலாம் என சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது, உடலுக்கு தேவையான புரதத்தை தருமாம். மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவி புரியுமாம். உடல் எடையை குறைப்பதற்கும் முளை கட்டிய பயிர் பெரிய ரோல் ப்ளே செய்கிறதாம்.
டார்க் சாக்லேட்-பாதாம்:
சாக்லேட், பொதுவாகவே இனிப்பு நிறைந்த பொருள்தான். ஆனால், இதில் டார்க் சாக்லேட் வகை மிகவும் கசப்பான ஒன்று. இதை, சர்க்கரை நோயாளிகள் கூட சிறிதளவு சாப்பிடலாம் என சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனுடன் பாதாம் சேர்த்து ஒரு பீஸ் அளவிற்கு சாப்பிடலாம்.
பழ சாலட்:
உடலிற்கு நன்மை பயக்கும் பழங்களை வைத்து, கொஞ்சம் மிளகுதூள், தேன் சேர்த்து சாப்பிடலாம். கண்டிப்பாக நமது இயல்பான ஸ்னாக்ஸ் உணவுகளுக்கு விடை கொடுக்கும் வகையில் பழங்கள் அமையும்.
மேலும் படிக்க | நரை முடி முற்றிலும் கருப்பாக மாறனுமா.. வெங்காயம், வெந்தயம், பாதாம் பருப்பு போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ