எடை குறைப்பு: எடை அதிகரிப்பு என்பது இன்று மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ள வழிகளாக உள்ளன.
உடற்பயிற்சியை விட ஆரோக்கியமான உணவு உடல் எடையை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். எடை இழப்புக்கான அத்தகைய உணவுப் பொருட்கள் விதைகளாகும்.
எடை இழப்புக்கான விதைகள்:
இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் அபாயகரமாக அதிகரிக்கும் எடையை குறைக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். மக்களின் வாழ்க்கை முறை மிகவும் பரபரப்பாக இருப்பதால், பலருக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பலர் உட்ல பருமனால் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில், மாலை நேர சிற்றுண்டியில் சில ஆரோக்கியமான விதைகளை சேர்த்து வந்தால், உடல் பருமனில் இருந்து விடுபடலாம். உடல் எடையை குறைக்க எந்தெந்த விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க இந்த விதைகளை பயன்படுத்தலாம்:
ஆளி விதைகள் (Flax Seeds):
ஒமேகா 3 கொழுப்பு உங்கள் உடலின் கொழுப்பை எரிக்கும் வேலையை செய்கிறது. இது தவிர, ஆளி விதையில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் உங்கள் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் ஆளி விதையை உட்கொள்ளலாம். ஆளி விதையை ஸ்மூத்தி, பானங்கள் அல்லது காய்கறிகளில் சேர்த்து உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க | யூரிக் அமிலம் குறையனுமா? வெறும் வயிற்றில் இந்த கஷாயத்தை குடியுங்கள்
சூரியகாந்தி விதைகள் (Sunflower Seeds):
சூரியகாந்தி விதைகள் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை சாலட் அல்லது சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். இதை உட்கொள்வதால் உங்கள் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும். ஆகையால் இது உங்கள் அதிகரித்து வரும் எடையை குறைக்க உதவும்.
சியா விதைகள் (Chia Seeds):
சியா விதைகள் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த விதையை உட்கொண்டால் நமது பசி கட்டுப்படுத்தப் படுகின்றது. இதன் காரணமாக, நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இது மட்டுமின்றி இதி ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இவை உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பி சக்தியையும் அளிக்கின்றன.
சியா விதைகள் எடையைக் குறைப்பதில் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த சிறிய கருப்பு விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. சியா விதைகளிலும் புரதங்கள் நிறைந்துள்ளன, இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்ற உணவுகளில் ஒன்று இந்த சியா விதை. இதில் அதிகப்படியான நார்ச்சத்தும் இருக்கிறது. சியா விதை உடலின் இயக்கங்களை சீராக்கி கொழுப்பைக் கரைக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பை கொழுப்பை எரிக்கும் ‘சில’ எளிய பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ