Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை
சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். கிரகணங்களுக்காக வானியலாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியனை நம்மால் பார்க்க முடியாது. அதை சூரிய கிரகணம் என்கிறோம்.
சூரிய கிரகணம் ஏப்ரல் 30 சனிக்கிழமை மதியம் 12:15 மணிக்கு தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, சித்திரை அமாவாசை தினத்தில் மேஷத்தின் அஸ்வினி நட்சத்திரத்தில் சனிக்கிழமை சூரிய கிரகணம் நிகழும். இதைக் கேட்டு மேஷ ராசிக்காரர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. ஏனெனில் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. மேற்கு-தென், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்டிக், பால்க்லாந்து, அர்ஜென்டினா, சிலி, உருகுவே, பராகுவே, பொலிவியா போன்ற இடங்களில் இந்த சூரிய கிரகணம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை
1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
2. சூரிய கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதே போன்று தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்
3. சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைத்தல், காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
4. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது, அவற்றைக் கையில் எடுக்கக்கூடாது.
5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
1. தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் சொல்வதனால், கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்
3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
4. வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
5. கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரத்தால் குபேரனாகப் போகும் 3 ராசிக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR