இந்து நாட்காட்டியின்படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஏப்ரல் 30 அன்று நிகழும். இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் 12 ராசிக்கும் வெவ்வேறு பலன்களை தரும். சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரிய கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சூரிய கிரகணத்தின் போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் - இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடைபெறுகிறது. எனவே இது உங்கள் ராசிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், மன உளைச்சலுக்கு ஆளாகலாம். எதிரிகள் ஆதிக்கம் செலுத்தலாம். வாகனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள், இல்லையெனில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. சூரிய கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்கவும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்


கடகம் - கடகத்தை ஆளும் கிரகம் சந்திரன். சூரிய கிரகணத்தின் போது சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் இருப்பார். இந்த நிலை கடக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். தெரியாத பயம் மற்றும் எதிர்மறை ஆதிக்கம் செலுத்தும். இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும். பொறுமையாக இருப்பது நல்ல பலன் தரும்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் கௌரவ இழப்பை சந்திக்க நேரிடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். எதிரி தரப்பிலிருந்து சேதம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.


சூரிய கிரகணத்தின் விளைவுகள் மற்றும் பரிகாரங்கள்
இந்த மூன்று ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்து தானம் செய்யுங்கள்.


கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை


தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
கிரகணத்தின் போது, ​​கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும். 
கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.


சூரிய கிரகணம் ஏப்ரல் 30 சனிக்கிழமை மதியம் 12:15 மணிக்கு தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரத்தால் குபேரனாகப் போகும் 3 ராசிக்காரர்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR