பெண்களில் பலரும் ஆடைகளை தேர்வு செய்ய கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் கொடுப்பது இல்லை. இறுக்கமான, அளவில் மாறுதல் உள்ள உள்ளாடைகளை அணியும்போது பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்பக பகுதி மிகவும் மென்மையான பகுதி என்பதால் இருக்கமான உள்ளாடை அணியும்போது மார்பகத்தின் கீழ் பகுதியில் எரிச்சல், நீர் கட்டி போன்ற விளைவுகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி பெண்களில் பலர் இருக்கமான உள்ளாடைகளை அணிந்துகொண்டு இரவில் உரங்குவார்கள்.


மேலும் படிக்க | Beat the Heat: கோடையை கூலாக்கும் சூப்பர் சர்பத்துகள்


அது மிகவும் தவறான செயல் மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. நமது உடலில் உள்ள செல்கள் ஸ்வாசிக்கும் வகையில் மெண்மையான உள்ளாடைகளை அணிந்து உறங்க வேண்டும். உதாரணத்திற்கு ஸ்போட்ஸ் ப்ரா போன்ற வகையில் உள்ள உள்ளாடைகளை அணிந்து உறங்கலாம்.


அப்போது நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மேலும், கோடை காலங்களில் இறுக்கமான ப்ரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரித்து தோல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி, செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் பெண்கள் காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் மிகவும் சிறந்தது.


மேலும் படிக்க | சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை; தினமும் கண்டிப்பா போட்டுக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR