Somavathi Amavasai: சோமவதி ஆமாவசையன்று என்ன செய்யக்கூடாது? ருத்ராபிஷேகம் செய்தால் பலன்
Somvati Amavasya 2023: சோமாவதி அமாவாசையன்று மௌன விரதம் இருந்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்... ஆசைகளை நிறைவேற்றும் சிவ வழிபாடு
இன்று சோமவதி அமாவசை சிறப்புடனும் பக்தி சிரத்தையுடனும் அனுசரிக்கப்படுகிறது. திங்களன்று மாதத்தில் வரும் அமாவாசை சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்துக்களின் நம்பிக்கையின்படி அமாவாசை மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. நதிகளில் புனித நீராடுவது வழக்கம். அதேபோல இறை வழிபாடு, ஜப-தபங்கள், ஸ்நானம்-தானம் போன்றவற்றுக்கு அமாவாசை நாள் உகந்தது. இந்த அமாவாசை நாளில் செய்யும் நல்ல செயல்கள், மூதாதையருக்கு நிம்மதியைக் கொடுத்தும், நமது வாழ்வில் வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
சோமாவதி அமாவாசையின் முக்கியத்துவம்
சோமவதி அமாவாசை முக்கியத்துவத்தை மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு விவரித்தார். சோமவதி அமாவாசையன்ரு, புனித நதிகளில் ஸ்நானம் செய்வோர் செல்வச் செழிப்புடனும், நோய்களற்றவர்களாகவும், துக்கம் மற்றும் துக்கங்களிலிருந்து விடுபடுவதாகவும் ஐதீகம்.
சோமவதி ஆமாவசையன்று என்ன செய்யவேண்டும்
மத்ஸ்ய புராணத்திலும் சோமவதி அமாவாசையின் மகத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமாவதி அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு தில தர்ப்பணம், அதாவது எள்ளும் நீரும் கொடுப்பது பித்ருக்களை சாந்திப்படுத்தும். அமாவாசை தினத்தன்று மௌன விரதம் கடைபிடிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
அன்றைய தினம் மரத்தை நடுவது மற்றும் மரத்தை பராமரிப்பது, நமது வறுமைகளை ஒழிக்கும், உடல்நலக் குறைபாடுகளைக் குணப்படுத்துகிறது மற்றும் ஆசைகளை நிறைவேற்றுகிறது.
மேலும் படிக்க | மீனத்தில் இருக்கும் சுக்கிரன் ‘இந்த’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளி வழங்குவார்!
சோமவதி அமாவாசையன்று ருத்ராபிஷேகம்
சோமவார அமாவாசை விரதத்தை தம்பதிகள் வைப்பது நல்லது. இதனால் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைக்குக்ம். சிலர் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு விரதத்தை அனுசரிக்கின்றனர்.
ஹரித்வார், திரிவேணி மற்றும் பிற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடுவது வழக்கம். அதோடு, மகா சிவராத்திரிக்கும் பிறகு வரும் சோமவதி அமாவாசையன்று ருத்ராபிஷேகம் செய்வதும், அப்படி செய்யும் அபிசேகத்தை பார்ப்பதும் வாழ்வில் அனைத்து வளங்களையும் கொண்டுவந்து சேர்க்கும்.
மேலும் படிக்க | Astro Traits: பணத்தை தண்ணீர் போல செலவு செய்யும் ‘சில’ ராசிகள்!
விரத விதிகள்
வீட்டை சுத்தம் செய்து அதிகாலையில் குளிக்கவும்.
விநாயகருக்கு பூஜை செய்யுங்கள்.
பின்னர் சிவலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து, 'ஓம் நம சிவாய' என்று ஜபிக்கவும்.
எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும்.
சந்தனத்தை பயன்படுத்தவும். இன்று சந்தன ஊதுபத்தியை வீட்டில் ஏற்றலாம்.
வெள்ளைச் சந்தனத்தை சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம்.
சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யவும்
சிவலிங்கத்தின் மீது சிறிது பால் தெளிக்கவும்.
வெள்ளை நிற பூக்களை வைத்து வணங்கவும்.
வெள்ளை நிற இனிப்பு நைவேத்தியம் செய்வது சிறப்பு
வம் வ்ருக்ஷாகாராய நம: சிவாய வன்॥ என்ற மந்திரத்தை108 முறை ஜபிக்க வேண்டும்.
மேலும் படிக்க | தங்கத் தட்டில் வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி!
சோமவதி அமாவாசை சிறப்பு பூஜைகள்
சூரிய நாராயணனை அன்று காலையில், வழிபடுவது பித்ருக்களின் ஆசிகளைப் பெற உதவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பசுவைக் குளிப்பாட்டுவதும், உணவளிப்பதும், பசுவை வழிபடுவதும் அமைதியும் செழிப்பும் அடைய உதவும்.
சிவனை வழிபடுவதும், அன்றைய தினம் விரதம் இருப்பதும் ஜாதகத்தில் பல்வேறு கிரகங்களின் மோசமான நிலைகளால் ஜாதகத்தில்உள்ள தோஷங்களை போக்க உதவும்.
மாலையில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி, பசு நெய்யில் தீபம் ஏற்றி, 'ஓம் நம சிவாய' என்று 108 முறை உச்சரிக்கவும். இது நிதி சிக்கல்களைத் தீர்க்க உதவும். சோமவார அமாவாசை விரதம் மற்றும் சூரிய நாராயணரை வழிபடுவது சிறப்பு.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ