இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை முக்கியமானது என்றாலும், தை மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு பிறகு, சனீஸ்வரர் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு சஞ்சாரம் செய்த 4 நாட்களிலேயே வரும் அமாவசை சனிக்கிழமை நாளில் வருவது கூடுதல் சிறப்பு. சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனாதன தர்மத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபட, தை அமாவாசை மற்றும் சனி அமாவாசை என கூடி வரும் நாளன்று சில தானங்களை அளித்தால் சனீஸ்வரரை சாந்திப்படுத்தலாம்.
தை அமாவாசையில் முன்னோருக்கு செய்யும் சடங்குகளும், தேவைப்படுவோருக்கு செய்யும் தானங்களும் உணவு, வாழ்க்கையில் வளம் பெற உதவும். ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனீஸ்வரர், ஒரு நபரின் கர்ம செயல்களின் அடிப்படையில் பலன்களை வழங்குகிறார்.
எனவே, ஒவ்வொரு ராசிக்காரரும் என்ன பரிகாரம் செய்து, சனீஸ்வரர் மற்றும் முன்னோர்களின் ஆசி பெறலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | Bhadra Rajyoga: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும் புதன் பெயர்ச்சி பத்ர ராஜயோகம்
தை அமாவாசையன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்
மேஷம்
தை அமாவாசை நாளன்று அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து, அன்ன தானம் வழங்கவும்
ரிஷபம்
ஏழைகளுக்கு தை அமாவாசையன்று அன்னதானம் செய்யுங்கள்
மிதுனம்
தை அமாவாசை, கோயிலுக்கு வெளியே உள்ள ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள்.
மேலும் படிக்க | 11 நாட்களில் மீண்டும் சனியின் நிலையில் மாற்றம்: 3 ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!!
கடகம்
தை அமாவாசை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வணங்கவும்
சிம்மம்
தை அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளுடன், உதவி கேட்பவர்களுக்கு அதை தட்டாமல் செய்யவும்.
கன்னி
தை அமாவாசை நாளன்று, சனீஸ்வரருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி வணங்கவும்
துலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு தை அமாவாசையன்று உதவுவது நன்மையளிக்கும்.
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கவுள்ள ராசிகள் இவை: நிவாரணம் காண பரிகாரங்கள் இதோ
விருச்சிகம்
தை அமாவாசை நாளன்று அனுமனை வணங்கி, அவருக்கு பூந்தி பிரசாதம் நிவேதனம் செய்து, அதை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கவும்
தனுசு
தை அமாவாசை நாளன்று மூத்தோருக்கான கடமைகளை செய்து, அன்னதானம் செய்வது வாழ்வில் வளம் சேர்க்கும்.
மகரம்
கோவிலுக்கு சென்று சிவனை வணங்குவதுடன் அன்ன தானம் செய்யவும்
கும்பம்
தை அமாவாசை நாளன்று சனிபகவான் முன் எண்ணெய் தீபம் ஏற்றி, எள் சாதம் விநியோகிக்கவும்
மீனம்
தை அமாவாசை கோவிலுக்கு சென்று நவகிரக வழிபாடு செய்து பிறருக்கு தானம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ