மீனத்தில் இருக்கும் சுக்கிரன் ‘இந்த’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளி வழங்குவார்!

Venus Transit 2023: பிப்ரவரி 15-ம் தேதி ஆடம்பரம், பணம், உடல் சுகத்தை அளிப்பவனான சுக்கிரன் கும்ப ராசியை விட்டு மீன ராசியில் பிரவேசித்துள்ளார். மீன ராசிக்கு அதிபதி குரு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2023, 06:22 PM IST
  • ரிஷப ராசியின் பதினோராம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார்.
  • மீன ராசிக்கு அதிபதி குரு என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மீனத்தில் இருக்கும் சுக்கிரன் ‘இந்த’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளி வழங்குவார்! title=

ஜோதிடத்தின்படி, எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சியும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல விளைவையும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு மோசமான விளைவையும் ஏற்படுத்துகிறது. பிப்ரவரி 15-ம் தேதி ஆடம்பரம், பணம், உடல் சுகத்தை அளிப்பவனான சுக்கிரன் கும்ப ராசியை விட்டு மீன ராசியில் பிரவேசித்துள்ளார். மீன ராசிக்கு அதிபதி குரு என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறார்கள். இதனால், பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். சுக்கிரன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளி வழங்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

கீழ்கண்ட  ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் நன்மை உண்டாகும்

ரிஷப ராசி

ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசியின் பதினோராம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரனின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நபரின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். சில வேலைகளில் இடையூறு ஏற்பட்டால், இந்த நேரத்தில் அவை அனைத்தும் விலகி,  காரியம் நிறைவேறும். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் புதிய வாகனம் வாங்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலை மேம்படும்.

கடக ராசி

ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரனின் சஞ்சாரம் கடக ராசிக்கு மிகவும் சாதகமாக அமையும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிகள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்கள் பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். நிதி நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையை மாற்றும் எண்ணத்தில் இருந்தால், இந்தக் காலத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். அதுமட்டுமின்றி வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியும் சந்தோஷமும் திரும்பும்.

மேலும் படிக்க | Astro Traits: பணத்தை தண்ணீர் போல செலவு செய்யும் ‘சில’ ராசிகள்!

கன்னி ராசி

கன்னி ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நடந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இது மட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்கள் துணையுடனான உங்கள் உறவு மேம்படும். இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, வேலை விஷயத்திலும் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, இந்த காலகட்டம் பங்குதாரர் பெயரில் வியாபாரம் செய்பவர்களுக்கும் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் வருமான உயர்வு இருக்கும். மேலும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏழரை சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க ராசிகளுக்கு ஏற்ற ‘சில’ எளிய பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News