இந்தியாவில் பல அழகான ஏரிகள் உள்ளன. ஆனால், ஒரு பயங்கர மர்மமான ஏரி ஒன்றும் உள்ளது. அதன் பெயரே Lake of No Return தான், அதாவது இங்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பியதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் மற்றும் மியான்மரின் (Myanmar) எல்லைக்கு அருகே ஒரு ஏரி உள்ளது, இது 'லேக் ஆப் நோ ரிட்டர்ன்' (Lake of No Return)  என்று அழைக்கப்படுகிறது. சில மர்மமான நிகழ்வுகளால் இந்த ஏரி உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இன்றுவரை இந்த ஏரியின் அருகே யார் சென்றாலும், அவர்கள் திரும்பி வந்ததே இல்லை என்று கூறப்படுகிறது.


இந்த மர்ம ஏரி அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, ​​அமெரிக்க விமான விமானிகள் இதனை சமதளம் என நினைத்து அவசர நிலையில் விமானத்தை தரையிறக்கியதாக கூறப்படுகிறது, ஆனால் அதன் பின்னர் விமானிகள் உள்ளிட்ட விமான மர்மமான முறையில் காணாமல் போனது.


பின்னர் அதே பகுதியில் பணிபுரியும் அமெரிக்க வீரர்கள் ஏரியையும் காணாமல் போன விமானத்தையும் விமானிகளையும் கண்டுபிடிக்க அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களும் அங்கிருந்து திரும்பவில்லை.


ALSO READ | Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!!


இந்த ஏரி தொடர்பான மற்றொரு கதையும் மிகவும் பிரபலமானது அதில் ஜப்பானிய வீரர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு திரும்பி வந்த போது, அவர்கள் வழி தவறி இங்கு வந்து சேர்ந்தனர் என்றும். அவர்களும் ஏரியை அடைந்தவுடனேயே மணலில் புதைந்து போனார்கள், அந்த மர்மமும் இன்னும் தீரவில்லை என்றும் கூறப்படுகிறது.


மக்கள் அடிக்கடி இங்கு வருகிறார்கள், பார்வையிடுகிறார்கள். ஆனால் யாரும் ஏரிக்குள் செல்லத் துணிவதில்லை. இந்த ஏரியின் மர்மத்தை அறிய நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் இப்போது வரை தோல்வியே ஏற்பட்டுள்ளது.


ALSO READ | In Pics: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR