மியான்மரில் (Myanmar) ஜனநாயகத்தை மீட்க இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. ராணுவத்தினர் இரும்பு கரம் கொண்டு அடக்க முயன்றாலும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.
பிப்ரவரி 1 ம் தேதி ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி (Aung San Suu Kyi ) தலைமையிலான ஜனநாயகக் கட்சியை இராணுவம் பதிவியிலிருந்து அகற்றி, அவரையும் அவரது பல என்எல்டி கட்சி உறுப்பினர்களுடன் கைது செய்தது. ராணுவம் அதிரடியாக ஆட்சியை பிடித்ததை அடுத்து, தொடர்ந்து நடைபெறும் ஜனநாயக ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறைக்கு உலக நாடுகள் பல, குறிப்பாக மேலை நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை நூதனமான முறையில் மேற்கொண்டுள்ளனர். குப்பைகளை பிரதான சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், மக்களையும் அவ்வாறே செய்யச் சொல்கிறார்கள்.
ALSO READ | மியான்மரில் பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமையும் முடக்கியது ராணுவம்
ராணுவம் எடுத்த நடவடிக்கையில், மார்ச் 29 திங்கள் அன்று சுமார் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திங்களன்று நடந்த மோதலில், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.கை எறி குண்டு ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, உயிரை காப்பாற்றிக் கொள்ள, தடுப்புகளுக்கு பின்னால் மக்கள் மறைந்து கொண்டனர் என அரசியல் கைதிகளின் உதவி சங்கத்தினர் கூறினர்.
ராணுவம் தனது சாம் பேத, தான, தண்ட முறைகளை பயன்படுத்தி போரட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. கிட்டதட்ட 50 ஆண்டுகள் ராணுவ ஆட்சியை கண்ட மியான்மாரில், 2012 ஆம் ஆண்டு வலுவிழக்க தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆன் சாங் சூகி, மூலம் ஓரளவு ஜனநாயகம் மீட்கப்பட்டது. எனினும், ராணுவம், இயற்றிய அரசியல் சாஸனத்தை பின்பற்றியே ஆட்சி நடைபெற்றது.
ALSO READ | மியான்மாரில் இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் ராணுவம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR