Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!!

உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2021, 05:23 PM IST
  • உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன.
  • அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.
  • அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle.
Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!! title=

உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle. 

அமெரிக்காவில் (America)  உள்ள புளோரிடா, பெர்முடா, புவர்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் பெர்முடா முக்கோணம் அதாவது  Bermuda Triangle என கூறுகிறார்கள். சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல ஆண்டு காலங்களாக விலகாமலேயே உள்ளது.

இதை சிலர் பாதாள உலகிற்கான கதவு என்கிறார்கள், இதை சிலர் இயல்பிற்கு மாறான மர்மமான பகுதி என்கிறார்கள். இது தொடர்பாக பல பாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

இப்பகுதிக்கும் வரும் கப்பல் மட்டுமல்ல, இந்த பகுதியின் மேலே பறக்கும் விமானங்கள் கூட காணாமல் போகின்றன என்றால் ஆச்சர்யமும் பீதியும் தோன்றுகிறது அல்லவா...

பல நூறு ஆண்டுகளாக காணாமல் போகு விமானங்கள் மற்றும் கப்பல்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ளது தான் 20 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு. டிசம்பர் மாதம் 20ம் தேதி காணாமல் போனது. அமெரிக்காவின் கடலோர காவல் படையினர் முழு வீச்சில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் 17,000 சதுர மைல்கள் அளவிற்கு சென்று தேடினர். எனினும் அந்த படகு இன்னும் கிடைக்கவில்லை.

ALSO READ | அமெரிக்கா தான் எங்கள் முதல் எதிரி.. மிரட்டுகிறார் Kim Jong Un..!!!

 

15ம் நூற்றாண்டு முதல் தொடரும் இந்த மர்ம கதையில், இது வரை சுமார் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள், சுமார் 75 விமானங்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. 

15ம் நூற்றாண்டில் தொடங்கிய மர்மம் 20வது நூற்றாண்டு வரை நீடிக்கிறது. இது குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள், சமீபத்தில், செயற்கை கோள் படங்களை ஆதாரமாக வைத்து, சில கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த முக்கோன பகுதியில் மேலுள்ள மேகங்கள் வெடிக்கின்றன என்றும், அதனால், 45 அடி அளவிற்கு அலைகள் எழும்புவதால், இதனை தாக்குபிடிக்க முடியாத கப்பல்களும் விமானங்களும் கடலுக்கடியில் போயிருக்க கூடும் என கூறுகின்றனர்.

பெர்முடா முக்கோணம் உள்ள பகுதியின் எல்லைக்குள் வரும் போது, கப்பல்கள் மற்றும் விமானங்களின் சிக்னலகள் துண்டிக்கப்பட்டு, தொடர்பை இழக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 சிலர் இதற்கு கடலில் உள்ள அரக்கர்கள் காரணம் என்றும், இது வேற்றுகிரக வாசிகளின் வேலை என்றும் கூறுகின்றனர். இது குறித்து பல கருத்தியல்கள் நிலவுகின்றன. ஆனால், இன்றும் இந்த மர்ம முடிச்சு அவிழவில்லை என்பது தான் நிலைமை. 

ALSO READ | அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் ... டிரம்ப் பதவி பறிக்கப்படுமா..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News