மார்கழி 7-ஆம் நாள்: திருப்பாவை 7-வது பாடலின் பொருள் இதுவே
மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.
மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர்.
மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மேலும் விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
அதன்படி மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையை இனிய குரலில் பாடி இறையருள் பெறுங்கள்.
திருப்பாவை பாடல் 7:
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணமூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!
பொருள்: துயிலும் பெண்ணே! "கீசி கீசு" என்று எங்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து பேசின. அந்தப் பேச்சின் ஒலி உனக்குக் கேட்கவில்லையா? மணம் பொருந்திய கூந்தலையுடைய இடைச்சியர் தங்கள் கழுத்தில் உள்ள அச்சுத் தாலியும், ஆமைத்தாலியும் "கலகல" என்று ஒலிக்க, கைகளை அசைத்து, மத்தினால் கடைந்து ஒசைப்படுத்தும் தயிரின் ஒலியும் கேட்கவில்லையா? தலைமையுடைய பெண்ணே! நாராயணனாகிய மூர்த்தியை, கேசவனை நாங்கள் பாடுகின்றோம்; நீ கேட்டுக்கொண்டே கிடக்கின்றாயோ? ஒளியுடையவலே! கதவைத்திற!