புதுடெல்லி: வித விதமான காலணிகளை வாங்குவது என்னவோ அனைவருக்கும் பிடித்தமான விஷயம் தான்.. ஆனால் 35 வருட பழைய ஒரு ஷூவை 4.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஆம், இது கதையல்ல இது நிஜம். அமெரிக்காவின் சோதேபி (Sotheby) என்ற ஆன்லைன் வலைத்தளம், இந்த  செகண்ட் ஹேண்ட் (Second hand Shoes) காலணியை 5,60,000 (இந்திய மதிப்பில் ரூ. 4.25 கோடி) டாலருக்கு விற்பனை செய்து, செகண்ட் ஹேண்ட் ஷூவை இவ்வளவு விலைக்கு விற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
 
இந்த ஷூவின் சிறப்பு என்ன?
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனுடைய ஷூ  இது. 1985 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற ஒரு  விளையாட்டு போட்டியின் போது மைக்கேல் ஜோர்டான் இந்த காலணிகளை அணிந்திருந்தார்.  35 ஆண்டு பழமையான இந்த  ஷூவின் மீது மைக்கேல் ஜோர்டான் தனது கையெழுத்தையும் போட்டுள்ளார். இந்த ஷூவுக்கு சுமார் 4.25 கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டதாக சோதேபி (Sotheby’s) ஆன்லைன் வலைத்தளம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் செய்தி படிக்க: கொரோனா நோயாளிகளுக்கு பிகினி உடையில் வந்து சிகிச்சையளித்த செவிலியர்!!


ஷீவுக்கு மிக அதிக அளவிலான ஏலம்:
உலகெங்கிலும், இவ்வளவு அதிக விலைக்கு இதற்கு முன்பு காலணிகள் விற்பனை செய்யப்பட்டதில்லை என்றும், 4.25 கோடிக்கு ஏலம் விடப்பட்ட இந்த ஷூ  உலக சாதனையை படைத்துள்ளது என்றும்  இந்த வலைதளம் குறிப்பிட்டுள்ளது. ஏலம் தொடங்கிய முதல் 25 நிமிடங்களிலேயே, 30,000 டாலருக்கு (2.28 கோடி ரூபாய்) ஏலம் கோரப்பட்டது. இறுதியாக இந்த காலணி 4.25 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது எனக் கூறியுள்ளது.


மேலும் செய்தி படிக்க: கிரிக்கெட் போட்டிகளில் இனி எச்சில் துப்பி பந்தை பிரகாசம் செய்யவதற்கு தடை...


அமெரிக்காவின் மிக பிரபலமான கூடைப்பந்து வீரரான மைக்கேல், 1985 ஆம் ஆண்டில் நடைப் பெற்ற ஒரு போட்டியின் போது “நைக் ஏர் 1”(Nike Air1) என்ற இந்த  சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஷூவை அணிந்திருந்தார். இந்த ஷூவின் ஒரு ஷீவின் அளவு 13 இன்ச் என்பதும், மற்றொரு ஷீவின் அளவு 13.5 இன்ச் என்பதும் இந்த விலையுயர்ந்த காலணியின் சிறப்பம்சம்.


(மொழியாக்கம் - ஹேமலதா.எஸ்)