ICC-யின் கிரிக்கெட் குழு திங்களன்று கிரிக்கெட் பந்தை பிரகாசிக்க உமிழ்நீரை பயன்படுத்த தடை விதித்தி பரிந்துரைத்துள்ளது.
எனினும், அனில் கும்ப்ளே தலைமையிலான குழு வியர்வை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை. பரிந்துரைகள் இப்போது ICC தலைமை நிர்வாகிகள் குழுவிடம் ஜூன் தொடக்கத்தில் ஒப்புதலுக்காக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
"நாங்கள் அசாதாரண காலங்களில் வாழ்கிறோம், இன்று குழு அளித்துள்ள பரிந்துரைகள் எங்கள் விளையாட்டின் சாரத்தை பாதுகாக்கும் வகையில், கிரிக்கெட்டை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகள் ஆகும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகும்" என்று கூட்டத்தின் பின்னர் கும்ப்ளே இதுதொடர்பாக தெரிவித்தார்.
ICC மருத்துவ ஆலோசனைக் குழுவின் தலைவரான டாக்டர் பீட்டர் ஹர்கார்ட், உமிழ்நீர் மூலம் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறித்து விவாதிக்கப்பட்ட பின்னர், ஏகமனதாக அதை தடை செய்ய ஒப்புக்கொள்வதற்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடுநிலை அல்லாத நடுவர்கள்
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இருதரப்பு தொடரில் நடுநிலை அல்லாத இரண்டு நடுவர்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது. "சர்வதேச பயணம், வரையறுக்கப்பட்ட வணிக விமானங்கள் மற்றும் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலங்களின் சவால்களைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் போட்டி அதிகாரிகளை குறுகிய காலத்தில் நியமிக்க குழு பரிந்துரைத்துள்ளது. உள்ளூர் எலைட் மற்றும் சர்வதேச குழு நடுவர்கள் மற்றும் நடுவர்களிடமிருந்து ICC வழியாக இந்த நியமனங்கள் தொடர்ந்து செய்யப்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எலைட் பேனல் மேட்ச் அதிகாரிகள் இல்லாத இடத்தில், சிறந்த உள்ளூர் சர்வதேச பேனல் போட்டி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று ICC-ன் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
பரந்த அளவிலான நடுவர்களின் நியமனங்களை ஆதரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் குழு பரிந்துரைத்தது, மேலும் ஒரு இடைக்கால நடவடிக்கையாக ஒவ்வொரு வடிவத்திலும் ஒரு இன்னிங்ஸுக்கு ஒரு அணிக்கு கூடுதல் DRS மதிப்பாய்வு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.