இந்தியாவை பொறுத்தவரை, இங்கு பல்வேறு பாரம்பரிய உணவுகள் இருக்கின்றன. ஆனால், பொதுவான உணவு பழக்கத்தினை எடுத்தக்கொண்டால் தென்னிந்திய உணவுகள் மற்றும் வட இந்திய உணவுகள் என இரு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அப்படி, தென்னிந்திய உணவு பழக்க வழக்கங்களின் படி, ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க உதவி செய்யும் டயட் உணவுகள் இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டயட்டில் தென்னிந்திய உணவுகள்..


தென்னிந்திய உணவை அனைவரும் விரும்புவார்கள். காரமான ரசம்,  பூ போன்ற போன்ற இட்லிகள் மற்றும் மொறு மொறு தோசைகள் என வயிறு மற்றும் மனது இரண்டையும் நிரப்பும் உணவுகளுக்கு நம்ம ஊர் பெயர் பெற்றது. இந்த உணவுகள் சாப்பிடுவதற்கு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் இருக்கும். பொதுவாக, தென்னிந்திய உணவுகள் காய்கறிகள், அரிசி மற்றும் தினைகளால் ஆனவையாகும். இவற்றால் உடலில் நல்ல கொழுப்புகள் சேரும். இந்த உணவுகளை 5 நாள் டயட் சார்டாக எந்தெந்த நாளுக்கு எதை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம் வாங்க. 


முதல் நாள்:


காலையில், இரண்டு முதல் நான்கு இட்லிக்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கிண்ணம் சாம்பார், ஒரு ஸ்பூன் சட்னி ஆகியவற்றையும் உட்கொள்ளலாம். மதிய உணவாக ஒரு கிண்ணம் அளவிற்கு கைக்குத்தல் அரிசி (Brown Rice), காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். மாலையில் பசித்தால் வறுத்த கடலை எடுத்துக்கொள்ளலாம். இரவில் ஒரு தோசை மற்றும் புதினா சட்னி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். 


இரண்டாவது நாள்:


இரண்டாம் நாள் காலை உணவாக ஒரு கிண்ணம் உப்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு தேங்காய் சட்னியையும் எடுத்துக்கொள்ளுங்கள். மதிய உணவுக்கு குயினாவொ வெஜிடேபில் புலாவ் எடுத்துக்கொள்ளுங்கள். மதிய ஸ்னாக்ஸிற்கு பழ சாலட் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு உணவாக நிறைய காய்கறிகள் கலந்த வெஜ் பிரியானி மற்றும் தயிர் பச்சடியை எடுத்துக்கொள்ளுங்கள். 


மூன்றாவது நாள்:


மூன்றாவது நாள் காலை உணவுக்கு சேமியா உப்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். மதிய உணவுக்கு ராகி அரிசியால் செய்த சாதம், பருப்பு கீரை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். மதிய ஸ்னாக்ஸ்ற்கு கிரீன் டீ எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களது மெட்டபாலிச சத்துக்களை அதிகரிக்கும். இரவில் சிறு தாணிய தோசை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடம் பனீரால் செய்த தொக்கு சேர்த்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க | தொங்கும் தொப்பையால் வெறுப்பா இருக்கா? அப்போ இந்த மேஜிக் விதை சாப்பிடுங்க


நான்காவது நாள்:


நான்காவது நாள் காலை உணவுக்கு காலையில் இரண்டு ராகி தோசை சாப்பிடுங்கள். அதனுடன் தக்காளி சட்னி மற்றும் ஒரு டம்ளர் மோர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மதிய உணவுக்கு குவியோனா அரிசியால் செய்த புலாவ் மற்றும் ஒரு கிண்ணம் காய்கறிகளை சாப்பிடலாம். மாலை ஸ்னாக்ஸாக ஊற வைத்த பயிரை வேக வைத்து சாப்பிடலாம். இரவு உணவாக இரண்டு சப்பாத்தி சாப்பிடுங்கள். 


ஐந்தாவது நாள்:


ஐந்தாவது நாள் டயட்டிற்கு காலையில் சில ரவா இட்லிக்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சேர்த்து தேங்காய் சட்னியையும் சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவுக்கு வடை மற்றும் ஒரு சிறிய கிண்ணம் அளவுக்கு கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை பருப்புடன் எடுத்துக்கொள்ளலாம். அல்லது அதை தயிர் சாதமாகவும் சாப்பிடலாம். இரவுக்கு மில்லட்ஸ் பொங்கல் மற்றும் தக்காளி வெங்காய சட்னியினை எடுத்துக்கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் யோகாசனங்கள்


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ