முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது எப்படி..? ‘இந்த’ 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்..!

Tips to Reduce Face Fat: முகத்தில் கொழுப்பு சேருவதால் கண்ணம், கழுத்து போன்ற பகுதிகள் அதிக தசையுடன் காணப்படும். இந்த வகை கொழுப்பினை கரைப்பது எப்படி..?   

Written by - Yuvashree | Last Updated : Aug 19, 2023, 01:45 PM IST
  • முகத்தில் கொழுப்பு இருந்தால் தசைகள் அதிகமாக இருக்கும்.
  • இதனல கண்ணம் மற்றும் கழுத்து பெரிதாக இருக்கும்.
  • முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க டிப்ஸ்.
முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பது எப்படி..? ‘இந்த’ 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்..!  title=

முகத்தில் கொழுப்பு சேருவதனால், முகத்தில் சதை அதிகாகி கழுத்து பகுதி பெரிதாக இருப்பது போல தோன்றும்.  இதனால், தாடை பகுதி அழகான வடிவில் வெளியில் தெரியாமல் போகும். உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதை விட முகத்தில் உள்ள கொழுப்பினை குறைப்பது பலருக்கும் கடினமான விஷயமாக தோன்றும். ஆனால், இதற்கு பல எளிய வழிமுறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன..< இங்கே பார்ப்போம். 

1. டயட்:

கொழுப்பை குறைக்க எளிய வழி, டயட் இருப்பதுதான் என பல மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலுக்கு தீங்கு விளைவிக்காத காய்கறி மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல டயட்டிற்கு அழகு. இது, ஆரோக்கியமான வாழ்வியலுக்கு உதவும், முகம் மட்டுமன்றி உடலில் உள்ள கொழுப்பினையும் குறைக்க டயட் உதவும். டயட்டுடன் சேர்த்து சர்க்கரை மற்றும் உப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்து துரித உணவுகளை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் கை மேல் பலன் கிடைக்கும் என்கின்றனர் பயன் பெற்றவர்கள். 

2. நல்ல தூக்கம்:

தூக்கமின்மையும் முகத்தில் சதை போடுவதற்கு ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கல். நல்ல தூக்கம், தூக்கமின்மை, நம் உடலில் உள்ள Cortisol எனும் ஹார்மோன்களை தூண்டிவிடும். இது, நம் மனநலனையும் உடல் நலனையும் பாதிக்கும் ஹார்மோன்களுள் ஒன்று. இந்த ஹார்மோனால் நம் உணவு பழக்க வழக்கங்கள் மாறலாம். இதனால் உடலிலும் மற்றும் முகத்திலும் அதிகளவில் கொழுப்பு சேரலாம். அதனால், கண்டிப்பாக 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். கொழுப்பை எரிக்க இதுவும் ஒரு சிறந்த வழி என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஒரு மாதத்திற்கு No Sugar டயட்.... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

3.உடல் எடை குறைப்பு:

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும் முகத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கலாம். இதனால் இவர்களின் முகம் அகலமாக அதிக தசையுடன் காணப்படும். ஆதலா, உடல் எடை குறைத்தால் முகத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி உடற்பயிற்சி, டயட், ஆரோக்கியமான உணவுகள் போன்றவை உடல் எடை குறைப்பிற்கு உதவுபவையாக பார்க்கப்படுகின்றன. இதனால், முகம் மற்றும் உடல் ஆகிய இரண்டுமே இளைக்கும். 

4. நீர்சத்து:

உடல் எடையை குறைக்க விரும்புவோர் தங்கள் உடலில் எப்போதும் நீர்சத்தினை அதிகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது கொழுப்பை குறைக்க உதவும். சில சமயங்களில் நமக்கு தாகத்திற்கும் பசிக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விடும். இதனால், சாப்பிடும் போது அதிகளவிலான உணவை உட்கொள்வோம். இதை தவிர்க்கவும் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கலாம். மேலும், உடலில் நீர்சத்து அதிகமாக இருந்தால் முகம் பொலிவு பெறும். இதனால், முகத்தில் கொழுப்பு சேராமலும் தடுக்கலாம். தினமும் 8 கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 

5.முகத்திற்கான உடற்பயிற்சிகள்:

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க சில உடற்பயிற்சிகளையும் பின்பற்றலாம். 

>வாயின் கீழ் பகுதியை முன்னும் பின்னுமாக அசை போட்டால் முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்கலாம். இந்த பயிற்சியை 8 முதல் 10 முறை செய்யலாம். 

>நாக்கால் அவ்வப்போது மூக்கை தொடலாம். இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்,

>கழுத்தை இடது புறமாக திருப்பி வாயின் கீழ் தாடையை முன்னும் பின்னுமாக அசைக்கவும். இவ்வாரு செய்தால் முகத்தில் உள்ள தசைகள் குறைய ஆரம்பிக்கும் என்கின்றனர் பயன் பெற்றவர்கள். 

மேலும் படிக்க | எடை ஓவரா ஏறுதா? உடனடியா குறைக்கலாம்.. இந்த பருப்பை இப்படி சாப்பிடுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News