சனீஸ்வரன் என்பவர் இந்து ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேறு பெயர்கள்
* சனி தேவன் (Shani Devi
* சனீஸ்வரன்
* மந்தாகரன் - மந்தமானவன் (மெதுவானவன்)
* சாயாபுத்ரன் - சாயையின் மகன் (சாயபுத்ரா)
இவ்வாறு பல்வேறு பெயர்கள் சனீஸ்வரன் அழைக்கப்படுகிறார். 


ALSO READ | சனி ஜெயந்தி: அமாவாசை நேரம், சடங்குகள் முழு விவரம் உள்ளே


சனீஸ்வர பகவான் கோயில்கள்


திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
இந்தியாவில் புகழ்பெற்ற சனீஸ்வரத் தலங்களில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் சனீஸ்வரனுக்கென தனியாக சன்னதி காணப்படுகிறது. காசியில் (Kasi) சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீஸ்வரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது.


குச்சனூர் சனீஸ்வரன் கோயில்
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் (Temple) சனீஸ்வரன் சுயம்புவாக உள்ளார். இக்கோயிலின் மூலவராக சனீஸ்வரன் உள்ளது சிறப்பாகும்.


திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம்
இலங்கையில் சனீஸ்வரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.


லோக நாயக சனீஸ்வரன் கோயில்
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் லோக நாயக சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீஸ்வரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.


ALSO READ | குலதெய்வ பூஜை வழிபாட்டின் முக்கியத்துவம்!!


சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சரியா?
சனிபகவானுக்கான வழிபாடுகளும் பூஜைகளும்கூட வெகு சிரத்தையுடன் செய்யப்படுகிறது.  'சனிபகவானைப்போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை' என்ற பயமே காரணம். சனி பகவானுக்கு எள்ளைக் கொண்டு தீபம் ஏற்றுவது சிலருடைய வழக்கமாக இருக்கிறது. ஆனால், சனி பகவானுக்கு எள்ளைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறானது என்றும், சரியானதுதான் என்றும் இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இது குறித்த நம் சந்தேகத்தைப் போக்கிக்கொள்வதற்காக, திருநள்ளாறு ஆலயத்தின் அர்ச்சகர் கோட்டீஸ்வர சிவாச்சார்யரிடம் கேட்டோம்.


சனீஸ்வர பகவானின் குணங்களைக் கொண்டிருக்கும் எள்ளை தீபத்தின் வழியாக எரிப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல. இதனால் எதிர்மறை எண்ணங்களே உருவாகும். யாரோ எப்போதோ செய்ததால் அதைத்தொடர்ந்து எல்லோரும் செய்து வருகிறார்கள். சண்டிகேஸ்வரருக்கு கையை தட்டி காண்பிப்பது, நந்தியம்பெருமானின் பின்பக்கம் தட்டுவது போன்ற ஆதாரமற்றச் செயலைப்போன்றது தான் எள் தீபம் ஏற்றுவதும். எள் சூடு. எள் நெய் குளிர்ச்சி. எள்ளை எண்ணெய்யாக தீபமிட்டு வணங்குவது தான் சனிபகவானுக்கு ப்ரீத்தியைத்தரும்.   


இறைவனுக்கு ஒளியைத் தரும் விளக்கேற்றும் செயல் புண்ணியமான காரியம். கோயில்களில் விளக்கேற்றும் கைங்கர்யத்துக்காக அரசர்களால் நிவந்தம் எனும் பெயரில் தானமாக நிலங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. முக்கூட்டு எண்ணெய் என்று ஆதிகாலத்தில் பனையெண்ணெய், ஆமணக்கெண்ணெய், எள் எண்ணெய்தான் ஆலயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என வரலாறு கூறுகிறது. இன்று விளக்கேற்றும் எண்ணெய் என வகை வகையாக பல எண்ணெய்கள் வந்துள்ளன. என்றாலும், எள் எண்ணெய் கொண்டு போடப்படும் தீபமே உத்தமமானது.


ALSO READ | வீடுகளில் இந்த இடங்களில் எல்லாம் தீபம் வைத்தால் புண்ணியம்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR