உலக பிரசித்திப்பெற்றது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பூஜையும் செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கோயிலில் ஐந்தறிவு படைத்த ஜீவன்களான ஸ்ரீ சிலந்தி, காள பாம்பு, அஸ்தி யானை ஆகிய மூன்றும் பூஜித்த தலம் என்பதால் ஸ்ரீகாளஹஸ்தி என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறது.


இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயில் ஸ்ரீகாளஹஸ்தி கோயில். மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. 10 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.


ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், திருமணம், குழந்தைப் பேறு கிடைப்பதற்காக செய்யப்படும் ராகு கேது பரிகார பூஜை சிறப்பு. பெரும்பாலேனோர் ராகு கேது பரிகார பூஜைக்காக தேர்வு செய்வது ஸ்ரீகாளஹஸ்தியைத்தான். இந்த தட்சிண (தென்) கயிலாயம் என்னும் கூறப்படுகிறது. காளஹஸ்தி கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. 


ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் ராகு, கேது கிரக தோ‌ஷம், சர்ப்ப தோ‌ஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகால பிரச்சினையில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது, சர்ப்பதோ‌ஷ நிவாரண பூஜை செய்து கொண்டால் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.