பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, அதன் உறுப்பினர்களை இபிஎஃப் கணக்குகளில் நாமினிக்களை இணைக்குமாறு கூறியுள்ளது. அவ்வாறு இபிஎஃப் கணக்குகளில் நாமினியை இணைக்கவில்லையெனில் கணக்கு வைத்திருப்பவர் இபிஎஃப்ஓ வழங்கும் பல நன்மைகளை அனுபவிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.  இபிஎஃப்ஓ-வின் அதிகாரபூர்வ தளத்தில் கணக்கு வைத்திருப்பவர் நாமினிக்களின் பெயர் மற்றும் விவரங்களை பதிவேற்றிவிட வேண்டும்.  இபிஎஃப்/பிஎஃப் நாமினேஷன்களை மாற்றுவது குறித்து இபிஎஃப்ஓ ட்வீட் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | உங்கள் EPF கணக்கின் UAN எண்ணை கண்டறிய சில வழிகள்!


நாமினேஷனில் மாற்றங்களை செய்ய விரும்புபவர்கள், இபிஎஃப் போர்ட்டலில் புரொஃபைல் போட்டோவை அப்டேட் செய்வதன் மூலம் இந்த செயல்முறையை நீங்கள் நிறைவு செய்யலாம்.  புரொஃபைல் போட்டோ இல்லாமல் நீங்கள் நாமினேஷனை அப்டேட் செய்தால், உங்களது திரையில், 'இந்த செயல்முறையை செய்யமுடியாது, உங்கள் புகைப்படத்தை பதிவேற்றுங்கள்' என்கிற செய்தி தோன்றும்.  புகைப்படத்தை நீங்கள் ஒருமுறை சரியாக பதிவேற்றிவிட்டால் நாமினேஷன் செயல்முறையை நீங்கள் செய்யலாம்.  இபிஎஃப்ஓவின் சமீபத்திய ட்வீட்டின்படி, இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப்/பிஎஃப் நாமினேஷன்களை மாற்றுவதற்கு புதிய நாமேஷன்களை தாக்கல் செய்யவேண்டும்.  புதிய இபிஎஃப்/பிஎஃப் நாமினேஷன்கள் பழைய நாமினேஷன்களை மீறுவதாக இருக்கும்.


 



இந்த சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆன்லைன் வாயிலாக இபிஎஃப்-ல் புதிய நாமினேஷன்களை தாக்கல் செய்யலாம்.


1) யுஏஎன் இபிஎஃப்ஓ தளத்திற்குள் உள்நுழையவும்.


2) மேனேஜ் மற்றும் இ நாமினேஷன் என்பதை க்ளிக் செய்யவும்.


3) குடும்ப அறிவிப்பின்படி, உங்கள் குடும்பம் இருந்தால் 'ஆம்' என்பதை க்ளிக் செய்யவும்.


4) குடும்ப விவரங்களை சேர் என்பதன் அடிப்படையில் உங்கள் நாமினியின் விவரங்களை உள்ளிடவும்.


5) நாமினியின் ஆதார் எண், பிறந்த தேதி, பாலினம், உறவுமுறை, முகவரி, புகைப்படம் மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை உள்ளிட்ட வேண்டும்.


6) வரிசையை சேர் என்பதை தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பும் நாமினி அல்லது குடும்ப விவரங்களை சேர்க்க வேண்டும்.


7) மொத்த பங்கு தொகையை உள்ளிடவும்.  ஒரு நாமினியாக இருந்தால் 100 சதவீதம் என்று எழுதவேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிக்கள் இருக்கும்பட்சத்தில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சதவீதத்தை பிரிக்க வேண்டும்.  


8) இபிஎஃப் நாமினேஷனை சேமி என்பதை க்ளிக் செய்ததும் உங்களது விவரங்கள் சேமிக்கப்படும்.


9) ஓடிபி-யை பெற இ-சைன் என்பதை க்ளிக் செய்யவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை சமர்ப்பிக்கவும்.


மேலும் படிக்க | LPG Subsidy: சிலிண்டர் மானியம் வரலயா? இப்படி செக் பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR