உங்கள் EPF கணக்கின் UAN எண்ணை கண்டறிய சில வழிகள்!

யுஏஎன் தெரியாவிட்டால் இபிஎஃப் இணையதளமான https://www.epfindia.gov.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் அதைக் கண்டறியலாம்.  

Written by - RK Spark | Last Updated : May 28, 2022, 04:32 PM IST
  • இபிஎஃப் கணக்கு ஒவ்வொரு ஊழியருக்கும் முக்கியமான ஒன்று.
  • பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இதனை பராமரிக்கிறது.
  • ஓய்வு பெற்ற பிறகு இந்த பணம் அவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது.
உங்கள் EPF கணக்கின் UAN எண்ணை கண்டறிய சில வழிகள்! title=

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (இபிஎஃப்ஓ) வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் 12 இலக்க எண் கொண்ட யுனிவர்சல் கணக்கு எண்ணை (யுஏஎன்) கொடுக்கிறது.  இபிஎஃப் சந்தாதாரருக்கு ஒதுக்கப்பட்ட இந்த யுஏஎன் எண் வேலை மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் அப்படியே இருக்கும்.  யுஏஎன் ஆனது தொழிலாளியின் பணியின் போது வெவ்வேறு முதலாளிகளால் தனிநபருக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினரின் அடையாளமாக செயல்படுகிறது.  யுஏஎன்-ன் கொள்கையானது ஒரு உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பல உறுப்பினர் அடையாள எண்களை ஒரே யுஏஎன்-ன் கீழ் இணைப்பதாகும்.  

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, மே 31-க்குள் அறிவிப்பு

இவ்வாறு இணைப்பதன் மூலம் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டையின் விவரங்களை பார்த்துக்கொள்ள முடியும்.  ஒரு உறுப்பினருக்கு ஏற்கனவே யுஏஎன் ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் புதிய நிறுவனத்தில் சேரும்போது, ​​புதிதாக ஒதுக்கப்பட்ட உறுப்பினர் ஐடியை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட யூஏஎன் உடன் குறியிடுவதற்கு அதையே வழங்க வேண்டும்.  இந்த யுஏஎன் உதவியுடன் பணியாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளில் தொடர்ந்து இருக்க முடியும்.  யுஏஎன் பக்கத்திற்கு செல்வதன் மூலம், ஒரு பணியாளர் ஆன்லைன் பாஸ்புக்குகளை பதிவிறக்கம் செய்வது, பரிமாற்ற கோரிக்கைகள் மற்றும் திருத்துதல் போன்றவற்றை செய்யலாம்.  இருப்பினும் யுஏஎன் உங்களுக்குத் தெரியாவிட்டால், இபிஎஃப் இணையதளமான https://www.epfindia.gov.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் அதைக் கண்டறியலாம். இதனை செய்ய கீழ்கண்ட படிநிலைகளை பின்பற்ற வேண்டும். 

1. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், 'சேவைகள்' என்பதை கிளிக் செய்து, 'பணியாளர்களுக்கு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. 'சேவைகள்' பிரிவின் கீழ் 'உறுப்பினர் யுஏஎன் /ஆன்லைன் சேவை (ஓசிஎஸ் / ஓடிசிபி)' ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

3. 'முக்கிய இணைப்புகள்' பிரிவின் கீழ் 'உங்கள் யுஏஎன்-ஐ அறிந்து கொள்ளுங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. அடுத்த பக்கத்தில் உங்கள் ஆதார், பான் ஐடியின் விவரங்களை உள்ளிடவும்.

5. அடுத்த பக்கத்தில் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.

6. கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, 'அங்கீகாரக் குறியீட்டைப் பெறு' என்பதைக் கிளிக் செய்யவும்.

7. யுஏஎன் எண் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

மேலும் நீங்களாகவே உங்களது யுஏஎன்-எண்ணை உருவாக்கிக்கொள்ள பின்வரும் படிநிலைகளை பின்பற்ற வேண்டும்.

1. UAN unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும்.

2. 'நோ யு யுஏஎன் ' என்பதைக் கிளிக் செய்யவும்.

3. புதிய பக்கத்தில், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் மாநிலம் மற்றும் இபிஎப்ஓ ​​அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. உங்கள் பிஎஃப் எண், உறுப்பினர் ஐடி மற்றும் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற பிற விவரங்களை உள்ளிடவும்.  உங்களின் சம்பளச் சீட்டில் உங்கள் PF எண் அல்லது உறுப்பினர் ஐடி குறிப்பிடப்படும்.

5. 'Get Authorization Pin' என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் மொபைலில் அதைப் பெறுவீர்கள்

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் அதிகரிக்கிறதா அகவிலைப்படி, சமீபத்திய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News