மும்பை: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வியாழக்கிழமை பங்குச் சந்தை வரவேற்றது. உள்நாட்டு பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு சென்செக்ஸ் 55 ஆயிரத்தை கடந்தது. அதே நேரத்தில் நிஃப்டி குறியீடு 16,500ஐ கடந்தது. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த அபார வெற்றியால் பங்குச்சந்தை மீண்டு உயர்வை கண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகமாக இருந்ததால், சந்தைக்கும் ஆதரவு கிடைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பிஎஸ்இயின் 30-பங்கு சென்செக்ஸ் 817.06 புள்ளிகள் உயர்ந்து 55,464.39 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல் நிஃப்டியும் 249.55 புள்ளிகள் உயர்ந்து 16,594 புள்ளிகளில் நிறைவடைந்தது. 


மேலும் படிக்க | UP Election Result 2022 Live: 267 இடங்களில் பாஜக முன்னிலை


ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலை காரணமாக, தணிந்தது.வர்த்தக முடிவில், 55,464.39 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே மற்றும் மாருதி சுஸுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்தன.


மாறாக, டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேப் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை நஷ்டத்தைச் சந்தித்தன. ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் லிமிடெட்டின் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா கூறுகையில், “ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலைகள் சற்று தணிந்ததன் காரணமாக, உலகளாவிய பங்குச் சந்தைகள் உயர்ந்தன. இதன் காரணமாக இந்திய சந்தையும் வலுப்பெற்றது.


மேலும் படிக்க | Punjab Election Results 2022 Live: பஞ்சாபில் கொண்டாட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR