Sun Transit May 2022: சூரியனின் ராசி மாற்றம் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் சூரியன் நபரின் தொழில், ஆரோக்கியம், வெற்றி போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். மேஷ ராசியில் இருக்கும் சூரியன், மே 15ம் தேதியன்று ரிஷப ராசிக்கு செல்வார். அங்கு அவர் ஜூன் 15 வரை இருப்பார். 


சூரியனின் இந்த பரிவர்த்தனையால் 6 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கிவிடுகிறது. எந்த ஆறு ராசிக்காரர்களுக்கு சூரியன் சாதகமாக இருப்பார் என்பதை தெரிந்துக் கொள்வோம்.


இது, அவர்கள் தங்கள் தொழிலில் புது முயற்சிகளை எடுத்து வெற்றி பெற உத்வேகம் கொடுக்கும். இதில் சிலருக்கு பணவரவும் அமோகமாக இருக்கும்.


மேலும் படிக்க | சனிபகவானின் தாக்கத்தால் இவர்களுக்கு இக்கட்டான நிலை: எச்சரிக்கை தேவை 


சூரியனின் ரிஷபப் பிரவேசத்தால் பலனடையும் ராசிகள்


மேஷம்- ரிஷப ராசியில் சூரியனின் பிரவேசம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் பெரிய வெற்றியைப் பெறலாம். சொத்து வாங்கலாம். சேமிக்க நினைப்பவர்களுக்கு உகந்த சமயம் இது.  


ரிஷபம் - ரிஷபம் ராசிக்குள் சூரியன் நுழைவதால், பெரிய அளவில் பலனடையும் ராசி ரிஷப ராசி ஆகும். உத்தியோகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. பிரபல கல்வி நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  


வருமானத்தில் அதிகரிக்கலாம், நிதி நிலைமையில் நிறைய முன்னேற்றத்தைக் கொண்டுவரும் அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிகளை கொண்டு வந்து சேர்க்கும் இந்த சூரியப் பெயர்ச்சி. 


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் பண பலத்தைத் ரும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இரண்டிலும் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பணவரவு சாதகமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: கன்னி ராசியினருக்கு பண வரவு உண்டாகும் 


சிம்மம்- சூரியனின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். பண பலன்களும், பதவி உயர்வும் கிடைக்கும். முக்கியமான பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அது பயனுள்ளதாக இருக்கும்.


கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். சூரியனின் இந்தப் பெயர்ச்சி, கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அமோகமாக இருக்கும். தொட்ட காரியம் துலங்கும்.  செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி ஏற்படும்.


மீனம் - ரிஷப ராசியில் சூரியனின் பிரவேசம் மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இதுவரை முட்டுக்கட்டையாகவும் முடியாமலும் இருந்த வேலை இப்போது துரிதமாக முடியும். பழைய வழக்குகள் தீரும். தடைகள் நீங்கி எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும்.  


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR