சனி அமாவாசை 2022: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் சனி அமாவாசையான இன்று நடக்கிறது. இன்று அதாவது ஏப்ரல் 30, சனிக்கிழமை, இந்த கிரகணம் அமாவாசை நாளில் நிகழ்கிறது. கிருஷ்ண பக்ஷம் அதாவது தேய்பிறை அமாவாசை நாளில் முடிவடைகிறது. மற்றும் சுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறை அடுத்த நாளிலிருந்து தொடங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அமாவாசை பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது. இன்று சனிக்கிழமை என்பதால் இது சனி அமாவாசை என்ற சிறப்பு நிகழ்வாக உள்ளது. இந்த நாளில் சூரிய கிரகணமும் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் முன்னதாக, அதாவது ஏப்ரல் 29 ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசித்தார். இந்த அனைத்து நிகழ்வுகளும் ஒன்றாக சேர்ந்து வந்துள்ள இந்த அமாவாசை நாளில், தானங்கள் செய்வது பல நன்மைகளை அளிக்கும். 


அமாவாசை அன்று சிறப்பு யோகம் உருவாகிறது


சனி அமாவாசை அன்று சில சிறப்பு யோகங்களும் உருவாகின்றன. சனி அமாவாசை அன்று காலை முதல் ப்ரீத்தி யோகம் உள்ளது. இது பிற்பகல் 03:20 வரை இருக்கும். அதன் பிறகு ஆயுஷ்மான் யோகம் தொடங்கும். இரவு 08:13 வரை அஸ்வினி நட்சத்திரம் உள்ளது. மொத்தத்தில் இந்த நிலை மிகவும் சாதகமான நிலையாக கருதப்படுகின்றது. 


இந்த நேரத்தில், அதிகாலையில் நீராடி, தானம் செய்வதும் மிகுந்த புண்ணியத்தைத் தருவதோடு, அனைத்து துன்பங்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். இது தவிர தர்ப்பணம், பிண்ட தானம், சிரார்தம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் பித்ரு தோஷங்களும் நீங்கும். பித்ரு தோஷம் இல்லாவிட்டாலும், இந்த நாளில் இவற்றை செய்யலாம். இதனால், பித்ருக்கள் மகிழ்ச்சியடைந்து வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறார்கள். 


மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 


இந்த பொருட்களை தானம் செய்வதால் சனி பகவான் மகிழ்ச்சி அடைவார்


சனி அமாவாசை அன்று கண்டிப்பாக ஏழை எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், சனி ஆசிர்வதித்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி, செழிப்பு ஆகியவற்றைக் அளிக்கிறார். இந்த நாளில் சனி பகவானுக்கு தொடர்பான விஷயங்களை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 


இந்த நாளில் புண்ணிய நதி நீர் கலந்த நீரில் காலையில் குளிப்பது விசேஷம். பின்னர் சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம்.


- நீல நிற பூக்கள், கறுப்பு எள், கடுக்காய், எள் ஆகியவற்றை சனி பகவானுக்கு படைப்பதால் நன்மை கிடைக்கும். 


- இதற்குப் பிறகு, கருப்பு ஆடைகள், கருப்பு எள், பாதணிகள், உளுத்தம் பருப்பு, கடுகு எண்ணெய் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR