நெல்லிக்காய், ஆயுர்வேத அதிசய உணவாக பார்க்கப்படுகிறது. இதை, பலர் உடல் எடை குறைப்பதற்காக டயட்டில் சேர்த்துக்கொள்வர். இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என பல சுவைகள் கலந்திருக்கும். இதை பவுடராகவும், ஊறுகாயாகவும் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் நலனுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காயை எப்படியெல்லாம் செய்து சாப்பிடலாம் என பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லிக்காய் ஜூஸ்:


நெல்லிக்காயில் ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கூடுதலாக, நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் உடல் நாள் முழுவதும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. நெல்லிக்காய் பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, முதலில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கவும்.


மேலும் படிக்க | குளிர்காலத்தில் பளபளப்பான சருமத்தைப் பெற வீட்டு வைத்தியங்கள்!


நெல்லிக்காய் தூள்:


நெல்லிக்காயை குறைந்த வெப்பநிலையில் உலர்த்தி, அதை தூளாக்க வேண்டும். ஆம்லா பொடியும் கடைகளில் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 


நெல்லிக்காய் ஊறுகாய்:


மிக எளிதாக செய்யக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாயை ரொட்டி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். ஒரு சில பழங்களில் நெல்லிக்காய் துண்டுகளை 1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்துடன் கலந்து ஊறுகாய் செய்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.


நெல்லிக்காய் மிட்டாய்:


உணவுக்குப் பிறகு அல்லது நாளின் எந்த நேரத்திலும் உங்களுக்கு இனிப்பு சாபிட்ட பின்பு நெல்லிக்காய் மிட்டாயை சாப்பிடலாம். இது ஆரோக்கியமான இனிப்பு தேர்வாக இருக்கும். இதை செய்ய முதலில் நெல்லிக்காயை துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைக்கலாம். அவை போதுமான அளவு காய்ந்ததும் - அவற்றை சேமித்து தினமும் மிட்டாய்களாக சாப்பிடலாம்.


நெல்லிக்காய் மரப்பா:


இஞ்சி மரப்பா போல, நெல்லிக்காயையும் மரப்பாவாக செய்து சாப்பிடலாம். இதை வெல்லத்தை உருக்கி செய்ய வேண்டும். இதை சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் சரியாகும். மேலும், வைட்டமின் சி சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இதில், காப்பர் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளதாக சில மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. 


மேலும் படிக்க | வாயு காரணமாக ஏற்படும் தலைவலியை போக்குவது எப்படி? இதோ சில வீட்டு வைத்திங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ