நெல்லிக்காய் நீர்: எடை இழப்பு, நீரிழிவு நோய்... அனைத்திலும் நன்மை பயக்கும்

Amla Water: நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2023, 01:21 PM IST
  • எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
  • நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்.
  • தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது.
நெல்லிக்காய் நீர்: எடை இழப்பு, நீரிழிவு நோய்... அனைத்திலும் நன்மை பயக்கும்

நெல்லிக்காய் நீரின் நன்மைகள்: நெல்லிக்காயில் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளன என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம். நெல்லிக்காயின் ஊட்டச்சத்து மதிப்பின் காரணமாக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக நெல்லிக்காய் சாறு, சட்னி, காய்கறி, ஊறுகாய் மற்றும் இன்னும் பிற வகைகளில் சமைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது. 

எனினும், நெல்லிக்காய் கொண்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றொரு வழியும் உள்ளது. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், தினமும் காலையில் நெல்லிக்காய் நீரை குடித்து வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என கூறுகிறார்.

நெல்லிக்காயில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. மேலும், அதில் சர்க்கரை மிகக் குறைவாகவே உள்ளது. ஆகையால் இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

நெல்லிக்காய் நீர்: தயாரிப்பது எப்படி? 

நெல்லிக்காய் தண்ணீர் தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். இந்த தண்ணீரை ஒரு கரண்டியால் நன்கு கலக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடைசியாக அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பானமாக குடிக்கவும்.

மேலும் படிக்க | தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

1. எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்

நெல்லிக்காயில் அமினோ அமிலம் ஏராளமாக காணப்படுகிறது. இதன் உதவியுடன் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது. இதுவே நெல்லிக்காய் நீர் எடையைக் குறைக்கும் பானமாகக் கருதப்படுவதற்குக் காரணம்.

2. நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் பல நோய்கள் ஏற்படலாம். காலையில் எழுந்தவுடன் நெல்லிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

3. தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது

நெல்லிகாய் பல வகையான அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது முகத்தின் அழகை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. உங்களுக்கு பருக்கள் அல்லது சுருக்கங்கள் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக நெல்லிக்காய் நீரை குடிக்கவும். மேலும், நெல்லிக்காய் வலுவான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற பயன்படுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தூக்கமின்மைக்கு தீர்வுகளை கொடுக்கும் AI..! இனி நிம்மதியாக தூங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

More Stories

Trending News