புதுடெல்லி: மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். சிலர் அமைதியாக இருந்தால், சிலர் தேவைக்கு ஏற்றாற்போல பேசுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் வெகுசிலரே வாயாடி என்று பெயர் வாங்கும் அளவுக்கு பேசிக் கொண்டே இருப்பார்கள். ஜோதிடம், ஒருவரின் அடிப்படை இயல்புகளை கணித்து சொல்லிவிடுகிறது. 


சிலர் என்ன பேசினாலும் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், வெகுசிலர், என்ன பேசினாலும் அது வில்லங்கமாகவே வந்து முடியும். ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.


ஏனென்றால் சில சமயங்களில் தங்கள் வாயாலேயே பிரச்சனையை விலை கொடுத்து வாங்கும் ராசிக்காரர்கள் இவர்கள்.
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நபரின் இயல்பும் வேறுபட்டது. அவர்களின் விருப்பு வெறுப்பு என்பது, அவருடைய ராசி மற்றும் கிரக நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். 


இந்த ராசிக்காரர்கள் அதிகம் பேசும் பழக்கம் கொண்டவர்கள், தங்கள் வாய்க்கு பூட்டு போடாவிட்டாலும் ஸ்பீட் பிரேக்கர் வைத்துக் கொள்வது நல்லது.


மேலும் படிக்க | ராகு ஏற்படுத்தும் பித்ரு தோஷம் மற்றும் ஜார்த்வ தோஷத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் 


ரிஷபம் - ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த ராசியில் சுக்கிரனீன் தாக்கம் தெளிவாக தெரியும். ரிஷப ராசியின் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அல்லது ராகு அல்லது கேதுவால் பாதிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் நாக்கை  கட்டுப்படுத்த முடிவதில்லை. யாரிடமும் என்ன பேசுவது என்று யோசிக்காமல் பேசிவிடுவார்கள்.


இவர்கள் சில சமயம் கோபத்திலோ அல்லது ஆவேசத்திலோ சொல்லக்கூடாத விஷயங்களையும் சொல்லிவிடுவார்கள். இதன் விளைவாக, பல மடங்கு வேதனையையும், எதிர்ப்பையிஉம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் மென்மையான குணம் கொண்டவர்களாகவும், மனம் சுத்தமாகவும் இருப்பது இவர்களின் ஒரு சிறப்பு. 


இதனால் இவர்களால் மற்றவர்களின் விஷயங்களை விரைவாக புரிந்து கொள்ள முடிவதில்லை.  எனவே, ஜோதிடத்தின் படி, ரிஷப ராசிக்காரர்கள், சுயநலவாதிகள் மற்றும் பேராசை கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


கன்னி - இந்த ராசிக்கு அதிபதி புதன் கிரகம். புதன் கிரகத்தின் தொடர்பு, வாக்கு சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய வார்த்தைகள் மற்றும் உரையாடலில் கவனமாக இருப்பார்கள்.


ஆனால், இந்த ராசிக்காரர்களை அசுப கிரகங்கள் பார்க்க்கும்போது கடுமையான வார்த்தைகளைப் பேசி மற்றவர்களிடம் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்கின்றனர். 


தங்கள் மனதை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் தயக்கமில்லாத கன்னி ராசிக்காரர்களை, இதே காரணத்திற்காக பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். 


எனவே, நண்பர்களாக இருந்தாலும் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருந்தால், மன கஷ்டத்தை தவிர்க்கலாம் என்று கன்னி ராசியினருக்கு அறிவுறுத்தப்படுகிறது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 2025 வரை ஏழரை நாட்டு சனியின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கப் போகும் ராசி


மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR