Ration Card: ரேஷன் கடைகளை கண்காணிக்க புதிய செயலி தொடக்கம்
Ration Shop Monitor APP: நியாயவிலை கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கும் செயலியை உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தொடங்கி வைத்தார்
சென்னை தலைமைச்செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொது விநியோகத் திட்ட கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " இந்த செயலி மூலம் மாதம் தோறும் நியாய விலைகளை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும். கடந்த செப்டம்பர் 1 ம் தேதி முதல் நபம்பர் 2 ம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்1,12 534 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 2,16,000 மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 75 சதவிகிதம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் ஓரளவு டெல்டா மாவட்டங்களில் முடிவடைந்துள்ளது. மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து , 22 சதவிகித ஈரபதத்தை உயர்த்தி தர தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் 17 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதம் என்கிற அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் நாட்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு நெல் ஈரபதத்தை அதிகரிப்பது தொடர்பாக கோரிக்கைகள் வைக்கப்படும்.
நியாயவிலை கடைகளில் 98.3 சதவிகிதம் பேர் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி , அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கபட்டு வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும். அதேபோல் ஜனவரி மாதம் முதல் தர்மபுரி நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யபட உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொருத்து மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
கிடங்குகளிலிருந்து அரிசி கடத்தலை தடுக்க 2886 கேமராக்கள் பொறுத்த டெண்டர் கோரபட்டுள்ளது. அதேபோல் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நேரடியாக அரவை ஆலைகளுக்கு எடுத்து சென்று பின்னர் அவை உணவு தானிய கிடங்குகளில் கொண்டு சேர்க்கும் வகையில் டெண்டர் விடுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | மழைக்காலத்தில் துவைத்த துணிகளை காயவைக்க சில டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ