7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அதிர்ச்சி! முக்கிய விதிகளில் மாற்றங்கள், அரசு உத்தரவு

7th Pay Commission: ஏழாவது சம்பள கமிஷனின் கீழ் ஊதியம் பெறும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தி உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 10:33 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.
  • மத்திய பணியாளர்கள் மீதான அபராதம் மற்றும் தண்டனை நடவடிக்கை குறித்து பணியாளர் துறை விளக்கம் அளித்துள்ளது.
  • சமீபத்திய புதுப்பிப்புகளை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அதிர்ச்சி! முக்கிய விதிகளில் மாற்றங்கள், அரசு உத்தரவு title=

7வது ஊதியக்கமிஷன் புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!! ஏழாவது சம்பள கமிஷனின் கீழ் ஊதியம் பெறும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தி உள்ளது. மத்திய பணியாளர்கள் மீதான அபராதம் மற்றும் தண்டனை நடவடிக்கை குறித்து பணியாளர் துறை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்திய புதுப்பிப்புகளை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். 

 போனஸ் மற்றும் அகவிலைப்படி அதிகரிப்பு போன்ற மகிழ்ச்சியான செய்திகளுக்கு மத்தியில், மத்திய அரசு, ஊழியர்களுக்கு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. பணியாளர் அமைச்சகத்தின் கீழ் வரும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அபராதம் விதிக்கப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் வரும் ஊழியர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசு உத்தரவு பிறப்பித்தது

அபராதத்தின் முதல் நடவடிக்கையின் போது, ​​இரண்டாவது நடவடிக்கையையும் செயல்படுத்தலாம் என்று DoPT அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு ஊழியருக்கு ஒரே நேரத்தில் இரண்டு அபராதம் விதிக்கப்படுவதாகவும், இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படும் என்றும் தண்டனை அதிகாரிகள் தங்கள் உத்தரவில் தெளிவாக எழுத வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும், அல்லது, ஒரு தண்டனை முடிந்தவுடன் அடுத்தது தொடங்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அடிப்படை ஊதியம் ரூ.9,000 அதிகரிக்கும் 

இதற்கான விதி என்ன?

ஆணையம் தனது உத்தரவில் இரு தண்டனைகளும் எவ்வாறு செயலாக்கப்படும் என தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றால், இரண்டு தண்டனைகளும் ஒன்றாக செயல்படுத்தப்படும் என்றும் பணியாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விதியின்படி, அடுத்தடுத்த உத்தரவுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டால், அது முந்தைய உத்தரவு முடிந்த பின்னர், உடனடியாக செயல்படுத்தப்படும். முதல் அபராதத்தின் காலம் எஞ்சியிருந்தால், அதுவும் முடிக்கப்படும். அதாவது இரண்டு அபராதங்களும் ஒன்றாக செயல்படுத்தப்படும். 7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான பல விதிகளில் DoPT மாற்றங்களைச் செய்துள்ளது.

ஓய்வூதியம் மற்றும் கிராசுவிட்டி கிடைக்காது

இதற்கு முன், அரசாங்கம் CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இல் மாற்றங்களைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கீழ், ஒரு மத்திய அரசு ஊழியர் தனது பணியின் போது கடுமையான குற்றம் அல்லது அலட்சியசெயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், அவரது ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி, அல்லது இரண்டும் நிறுத்தி வைக்கப்படும்.

பயணப்படி விதிகளில் நிவாரணம்

இது தவிர, மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி தொடர்பான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, வடகிழக்கு பகுதி, ஜம்மு-காஷ்மீர், லடாக் அல்லது அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய இடங்களுக்கு விமானப் பயணத்திற்கு CCS (லீவ் பயணச் சலுகை) விதிகள் 1988-ன் கீழ் ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் 25, 2024 வரை இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபேக்டர் பற்றிய முக்கிய அப்டேட், விரைவில் நல்ல செய்தி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News