புதுடெல்லி: இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராசிபலன் - 23-06-2021


மேஷம்: உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. 


ரிஷபம்: மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதுவிதமான ஆசைகளும், நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்களும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.


மிதுனம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். 


Also Read | இன்றைய பஞ்சாங்கம் ஜூன் 23, 2021 ஆனி 9ம் நாள், புதன்கிழமை


கடகம்: திடீர் தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்களின் மீதான ஆர்வம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். அக்கம்- பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.


சிம்மம்: உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.


கன்னி: திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.


துலாம்: குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் சூழ்நிலையை கையாளுவது நல்லது. உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். 


Also Read | அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்களை விடுவிக்க மூன்று கோடி பேர் விருப்பம்


விருச்சிகம்: மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக தடையாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.


தனுசு: எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
 
மகரம்: உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீகத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சாதகமான முடிவுகள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் லாபம் மேம்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.


கும்பம்: மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


Also Read | முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்தி ஆலயங்கள், உங்களுக்கு அருகிலேயே…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR