நாம் செய்யும் செயல்களே கர்ம வினைகளாகின்றன. அவை நமது அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்வதாக ஐதீகம். நாம் செய்யும் கர்மாக்களின் பலன்களை நாம் தான் அனுபவிக்க வேண்டும் என்றாலும், செய்த தவறு என்னவென்றே தெரியாமல் அதன் பலன்களை அனுபவிக்கும்போதும் மனம் கவலை கொள்கிறது.
நல்ல கர்மாக்களுக்கு நற்பலன் கிடைக்கும் என்பதால் அது யாரையும் பாதிப்பதில்லை. ஆனால் பாவங்கள் நமக்கு தண்டனையை கொடுத்துவிடும் என்னும்போது, என்னை மன்னித்தருள்க என இறைவனை தஞ்சம் அடைவதைத் தவிர வேறு வழி என்ன?
உலகின் பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கும் புண்ணியபூமி நமது தென்னிந்தியா. அதிலும் தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் பல ஆலயங்களில் வினைகளை போக்கும் தெய்வங்கள் வீற்றிருந்து, நமது பாவங்களை போக்கி அருள் பாலிக்க காத்துக் கொண்டிருன்றனர். அதில் முக்கியமான ஆறு கோவில்களளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
Also Read | சப்த கன்னியர்களை வணங்கினால் கிடைக்கும் பலன்களைப் பற்றி தெரியுமா?
வைத்தீஸ்வரன் கோவில்: வைத்தீஸ்வரராக அமர்ந்து ஆரோக்கியத்தை கொடுக்கும் சிவபெருமான் பாவங்களை எரித்து நற்கதியும், இகபர சுகத்தையும் கொடுப்பவர். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தலம் என்பதும் கூடுதல் சிறப்பு. வைத்தீஸ்வரரை வணங்கி வினையறுத்து நல்வாழ்வைப் பெறலாம்.
திருபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம்.
கடன் தொல்லை, எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள், நோய்ப்பிணி என முக்கியமான துன்பங்களை தீர்க்கும் சக்தி வாய்ந்தவர் கம்பஹரேஸ்வரர்.
கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்புவாய்ந்தது. மாந்தியால் பிரச்சனை ஏற்படுபவர்கள் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் ஐயனை வணங்கி சுக வாழ்வு பெறலாம்.
ராகு மற்றும் கேது பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக சென்று வணங்க வேண்டிய புண்ணியத்தலம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில்.
திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆலயம். இங்கு சென்று மகாலிங்கேஷ்வரரை தரிசித்தால், அவரின் மஹாபிரசாதமாக பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கிவிடும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
திருந்து தேவன்குடி கற்கடகேஸ்வரர் ஆலயம் மிகவும் விஷேசமானது. கற்கடகேஸ்வர பெருமான் அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கி மன நிம்மதியையும் நல்வாழ்க்கையையும் நல்குவார்.
ALSO READ | Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR