Rasipalan September 18: இன்றைய ராசிபலன் என்ன சொல்கிறது?
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...
ராசிபலன் - 18-09-2021
மேஷம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரிஷபம்: குழந்தைகளின் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கான முதலீடுகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்: தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.
கடகம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத தகவல்களின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும்.
சிம்மம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் மற்றும் புதிய நபர்களின் ஆதரவின் மூலம் லாபம் ஏற்படும்.
கன்னி: உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான தடைகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.
ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்
துலாம்: குழந்தைகளின் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகள் மற்றும் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த சோர்வுநிலை குறையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு: புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும்.
மகரம்: தனவரவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்: மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளின் மூலம் அனுபவம் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR