Traditional Pongal: தமிழர் திருநாள் தைத்திருநாள் தொடங்கும் நாள் பொங்கல் தினமாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது பண்டிகையின் பெயராக இருந்தாலும், அன்று செய்யும் உணவு பதார்த்தத்தின் பெயரும் பொங்கல் என்பது சிறப்பு. பண்டிகையின் பெயருக்கும், உணவின் பெயருக்கும் உள்ள ஒற்றுமையால், பல நகைச்சுவைகளும் பிரசித்தி பெற்றவை. ’பொங்கலுக்கு பொங்கல் சாப்பிடலாம்.... ஆனால், தீபாவளிக்கு தீபாவளியை சாப்பிட முடியுமா?’ என்பது போன்ற மொக்கை நகைச்சுவைகளையும் கேட்காமல் இருந்துவிட முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பொங்கல் பண்டிகை அன்று, பொங்கல் வைத்து அதனை படையலிட்டு வழிபடுவது பாரம்பரிய மரபு. அதிலும் பொங்கல், இருவிதமாக வைக்கப்படும். வெறும் அரிசி சாதத்தை குழைய வைத்து செய்யும் பொங்கல் ஒரு பானையிலும், வெல்லம் சேர்க்கப்பட்ட இனிப்பு சர்க்கரைப் பொங்கல் மற்றுமொரூ பானையில் வைக்கப்படும்.



சர்க்கரைப் பொங்கல் என்று பெயர் இருந்தாலும், உண்மையில் வெல்லத்தைக் கொண்டு தான் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் செய்து படைப்பார்கள்.  பொங்கல் பண்டிகையன்று செய்யப்படும்  வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் இந்த இனிப்புப் பொங்கலின் ஸ்பெஷல் என்னவென்றால், புதிதாய் அறுவடை செய்த நெல்லில் இருந்து கிடைத்த அரிசியால் செய்யப்படும் சுவையான பொங்கல் என்பதாகும். அரிசி மட்டும் புதியது அல்ல, பருப்பு, வெல்லம் என பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுமோ புதியதாக இருக்கும்.


மேலும் படிக்க | பொங்கல் வைக்க சரியான நேரம் இதுதான்..!! மகிழ்ச்சி மட்டுமல்ல லக்ஷ்மியும் வரும்


புதுப்பானை


புதுப்பானையில், புத்தரிசியில் பொங்கலிட்டு, அதில், மஞ்சள் கொத்து சுற்றிக் கட்டி வைத்து, பொட்டிட்டு அலங்கரித்து பானையை படையலில் வைப்பது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 


அத்துடன், புதிதாய் விளைந்த நாட்டுக் காய்கறிகளான, அவரை, பூசணி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு என அனைத்தையும் வைத்து படையில்டுவதும், கூட்டு செய்வதும் தைப்பொங்கலன்று தொடரும் பாரம்பரியம் ஆகும். 


பொங்கலன்று பொங்கல் செய்யலாம் ஆனால் பாரம்பரிய முறைப்படி பொங்க வைக்கத் தெரியுமா?
பாரம்பரிய சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: 
பச்சரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தண்ணீர் - அரை லிட்டர்
நெய் - 50 கிராம்
முந்திரி 25 கிராம்
உலர் திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 4 எண்ணிக்கை
கிராம்பு - 2 எண்ணிக்கை


மேலும் படிக்க | Happy Pongal 2023: பொங்கலோ பொங்கல் என சூரியனுக்கு படையலிடும் கலாச்சார பண்டிகை
 
பொங்கல் பானை பொங்க வேண்டும் என்பதற்காக பால் சேர்க்கும் வழக்கத்தையும் பலர் கடைபிடிக்கன்றனர். ஆனால், இது பாரம்பரியமான வழக்கமல்ல.
அரிசியை ஒரு முறை கழுவிய தண்ணீரை  ஊற்றி விட்டு, அதன் பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை  கழுவும் தண்ணீரை வைத்து பொங்கல் பானை ஏற்றுவது  பாரமபரிய வழக்கம்.


செய்முறை: பாசிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பொங்கல் பானையில் தண்ணீர் விட்டு, அது கொதித்து வந்ததும், கழுவி வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை போட்டு, தீயை சிறிதாக்கவும்.


பொதுவாக, பொங்கல் பானையில் தண்ணீர் கொதித்து வரும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என குலவையிட்டு, சிறிதளவு அரிசி மற்றும் பருப்பை கையில் எடுத்துக் கொண்டு, பானையை மூன்று முறை சுற்றி அதை பானைக்குள் போட்ட பிறகு, எஞ்சியுள்ள அரிசி மற்றும் பருப்பை பானையில் கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் சேர்ப்பார்கள். இது பொங்கல் வைக்கும்போது கடைபிடிக்கும் பாரம்பரியப் பழக்க வழக்கம் ஆகும்.


மேலும் படிக்க | Jallikattu 2023: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள், காத்திருக்கும் தமிழ்நாடு


பாத்திரத்தில் வெந்துக் கொண்டிருக்கும் அரிசி மற்றும் பருப்பை அடிக்கடி கரண்டியால் கிளறிவிடவும். வெல்லத்தை பொடி செய்து எடுத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைய வைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதை வடித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வெல்லத்தில் மண் மற்றும் தூசி இருக்கும் என்பதால், வெல்லத்தை கரைத்து வடிகட்டுவது நல்லது. 


அரிசி வெந்ததும், அதில் கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து, மிதமான தீயில் சமைக்கவும். மற்றொரு புறத்தில், நெய்யில் சிறிதளவை சூடு செய்து, அதில் திராட்சை மற்றும் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வெல்லம் கொதிக்கும் அரிசியுடன் நன்கு கலந்ததும், அதில் எஞ்சியுள்ள நெய், ஏலக்காய், கிராம்பு மற்றும் வறுத்து வைத்திருக்கும் திராட்சை முந்திரியை சேர்த்து, பொங்கலை நன்கு கிளறி விட வேண்டும். இப்போது பாரம்பரிய பொங்கல் ரெடி...  


இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பாரம்பரியப் பொங்கல் பண்டிகையை பொங்கலிட்டு கொண்டாடி, பழையனவற்றைக் கழித்து, புதியதை புகுத்துங்கள்.... பொங்கலோ பொங்கல்...


மேலும் படிக்க | பாரம்பரியம் மாறாமல் ‘அகப்பை’ மூலம் பொங்கல் வைக்கும் வினோத கிராமம்! இந்தகாலத்திலும் இப்படியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ