பல டிசைன்களில் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் - ஆலோசனையில் முதலமைச்சர்

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 19, 2022, 12:51 PM IST
  • பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள்
  • பல டிசைன்களில் வழங்கப்படவிருக்கின்றன
  • அதுகுறித்த ஆலோசனையில் முதலமைச்சர் இன்று ஈடுபட்டார்
 பல டிசைன்களில் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் - ஆலோசனையில் முதலமைச்சர்

பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டமானது 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் வாரியாக வேட்டி, சேலைகளை அனுப்புவது, திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்தும், விநியோகிக்கும் நடைமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், கைத்தறித் துறை செயலாளர், அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | சென்னையில் சோகம்... கடற்படை பேருந்து விபத்தில் சிக்கி கர்ப்பிணி, சிசுவோடு உயிரிழப்பு!

அரசின் இலவச வேட்டி சேலை 2023 ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், பல நிறங்களிலும், 15 டிசைன்களிலும் சேலைகள், இதேபோல 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டிகள் வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்கிறது.

முன்னதாக, பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி டெண்டர் அறிவித்திருந்தது. அதில், 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்கும் இந்த புதிய டெண்டருக்கு செப்டம்பர் 9ஆம் தேதி கடைசி நாள் என்றும், இதன் மூலம், சுமார் 1. 80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் வழங்கப்படவிருக்கும் வேட்டி, சேலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News