போஸ்ட் ஆஃபீஸ் FD vs NSC: சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. எனினும், இன்றும் நாட்டின் பெரும் பகுதியினர் தபால் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். முதலீட்டாளர்களின் பணம் இதில் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதுதான் இதற்கு மிகப்பெரிய காரணம். இது அரசாங்க உத்திரவாதத்தைப் பெறுகிறது. பல அஞ்சலகத் திட்டங்களில் முதலீடு செய்வது வரி சேமிப்புத் திட்டங்களின் பலனையும் தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாதம் முடியவுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், 2022-23 நிதியாண்டில் (FY 2022-23) வரிவிலக்கைப் பயன்படுத்த விரும்பினால், மார்ச் 31-க்கு முன், வரி விலக்கின் பலனைத் தரும் திட்டங்களில் கண்டிப்பாக முதலீடு செய்யுங்கள். அஞ்சல் அலுவலகத்தின் இரண்டு திட்டங்களைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். இவற்றில் வலுவான வருமானத்துடன் வரி விலக்கின் பலனைப் பெற முடியும். அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்புத் திட்டம் ஆகியவை இந்த திட்டங்களாகும். 


தபால் அலுவலக எஃப்டி திட்டம்:


போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி திட்டமானது டைம் டெபாசிட் ஸ்கீம் (Post Office TD Scheme) என்றும் அழைக்கப்படுகிறது. மொத்தம் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் எஃப்டி வடிவில் தபால் அலுவலகத்தில் முதலீடு செய்யலாம். 5 வருட காலத்திற்குள் முதலீடு செய்தால், வருமான வரிப் பிரிவு 80C கீழ் ரூ.1.5 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். 1,000 ரூபாயிலிருந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதே நேரத்தில், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 


ஐந்தாண்டு கால டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதம் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில், அஞ்சல் துறை ஒரு வருட கால முதலீட்டுக்கு 6.6 சதவீதமும், 2 வருட காலத்திற்கு 6.8 சதவீதமும், 3 வருட காலத்திற்கு 7.00 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 5 வருட எஃப்டி-களில் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.


நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட்: 


தேசிய சேமிப்புத் திட்டம், அதாவது நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் அஞ்சல் அலுவலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இதில், முதலீட்டாளர் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் 7 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இந்த வட்டியை நீங்கள் கூட்டும் (காம்பவுடிங்) அடிப்படையில் பெறுவீர்கள். இந்தத் திட்டத்திலும், ரூ.1,000 முதல் ரூ.100 வரையிலான மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 


மேலும் படிக்க | ITR Advice: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள் 


இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 முதலீடு செய்தால், அதற்கு ஈடாக ரூ.1403 கிடைக்கும். இந்தத் திட்டத்திலும் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி பெறுவீர்கள். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு கடன் வசதியும் கிடைக்கும்.


எந்த திட்டம் சிறந்தது?


வரிச் சேமிப்பைப் பொறுத்தவரை, இரண்டு திட்டங்களிலும் நீங்கள் ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி பெறுவீர்கள். வித்தியாசம் என்னவென்றால், அஞ்சல் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழில் முதலீடு செய்வதன் மூலம், கூட்டுத்தொகையின் அடிப்படையில் வட்டியின் பலனைப் பெறுவீர்கள். இதனுடன், வருமான வரி ஸ்லாப்பின்படி இரண்டு திட்டங்களுக்கும் பெறப்பட்ட வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. எதிர்காலத்தில் நீங்கள் கடன் வாங்க விரும்பினால், என்எஸ்சி திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் மட்டுமே நீங்கள் அதை எடுக்க முடியும்.


மேலும் படிக்க | பென்ஷன் கவலையை போக்கி வரி சேமிப்பையும் தரும் NPS திட்டம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ