`டெடி டே` - என்ன ஸ்பெஷல் இன்று!
காதலர் தின வாரத்தில் பிப்ரவரி 10ம் தேதியான இன்று காதலர்களால் `டெடி டே` கொண்டாடப்படுகிறது.
உலகத்தில் உள்ள காதலர்கள் அனைவராலும் Valentine Week சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் முதல் நாளான 'ரோஸ் டே'-ல் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை பகிர்ந்துகொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். இரண்டாம் நாள் 'ப்ரொபோஸ் டே', இதில் காதலர்களாக மாற விரும்புவார்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமானவர்களிடம் உணர்வுபூர்வமாக காதலை வெளிப்படுத்தினர். மூன்றாம் நாளான நேற்றைய தினம் 'சாக்லேட் டே', இதில் பலரும் தங்களின் வசதிக்கு ஏற்ப விலை அதிகமான அக்குறைவான சாக்லேட்டுகளை பரிமாறிக்கொண்டனர். இப்படி உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்பட்டு வரும் காதலர் தின வாரத்தில், சிலர் 90'ஸ் கிட்ஸ்கள் காலத்தில் இருந்த 50பைசா சாக்லேட்டுகளை கூட புகைப்படங்களாக பகிர்ந்துகொண்ட சில வேடிக்கையான சம்பவங்களும் அரங்கேறியது.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதலை சொல்ல இது சரியான நேரம்: மிஸ் பண்ணிடாதீங்க
அந்த வகையில் காதலர் தின வாரத்தின் நான்காம் நாளான இன்று 'டெடி டே' கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே பெண்களுக்கு இந்த டெடி பொம்மைகள் அதிகம் பிடிக்கும், பல பெண்களது நண்பனாகவும் இந்த கரடி பொம்மைகள் விளங்குகின்றன. இவை கையாள்வதற்கு மிகவும் மென்மையாக இருப்பதால் பெண்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். காதலர் தின வாரத்தில் கொண்டாடப்படும் இந்த 'டெடி டே'-ல் காதலர்கள் ஒருவருக்கொருவர் பெரிய அல்லது சிறிய கரடி பொம்மைகளை அவர்களது இணையருக்கு வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இவற்றை பரிமாறி கொள்ளும் போது காதலர்களின் அதீத அன்பையும், அதிகப்படியான காதலும் வெளிப்படுவது மட்டுமல்லாது இத்தகைய பொம்மைகள் மனதில் ஏற்படும் துயர்களை நீக்குவதாக அமைகிறது. இதை பார்த்ததும் இணையருக்கு முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்படுகிறது. இந்த பரிசு நான் வெளியில் கரடுமுரடாக தெரிந்தாலும் எப்போதும் மென்மையாகவும், ஒரு தோழனாகவும்/தோழியாகவும் உடன் இருப்பேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைககிறது. மேலும் சிலர் மனம் கவரும் சில வசனங்கள் மூலமாகவும் தங்களது இணையருக்கு 'டெடி டே' வாழ்த்துக்களை கூறுகின்றனர்.
உதாரணமாக, 'இந்த டெடியை நான் உனக்கு வழங்குவதன் முக்கிய காரணம் நான் எப்போதும் உன்னுடனேயே உன்னை பார்த்துக்கொண்டு இருப்பேன், ஹேப்பி டெடி டே ! ", "என அழகான நபருக்கு இந்த அழகான டெடி, ஹேப்பி டெடி டே ! ", "நீங்கள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான சிறப்பான நபர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக நான் இந்த டெடியை உங்களுக்கு தருகிறேன், ஹேப்பி டெடி டே !", என்றவாறு பல வசனங்கள் இந்த நாட்களை மேலும் மெருகேற்றுகின்றது.
மேலும் படிக்க | இந்த 3 ராசியில் பிறந்த ஆண்கள் அதிக காதலை வெளிப்படுத்துவார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR