இந்த ராசிக்காரர்களுக்கு காதலை சொல்ல இது சரியான நேரம்: மிஸ் பண்ணிடாதீங்க

Valentine Week: ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, காதலர் வாரத்தின் கடைசி 5 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 9, 2022, 07:08 PM IST
  • காதலர் வாரத்தின் கடைசி 5 நாட்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
  • புதிதாக காதலை சொல்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு காதலை சொல்ல இது சரியான நேரம்: மிஸ் பண்ணிடாதீங்க title=

காதலர் வாரம் தொடங்கிவிட்டது. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட பலர் திட்டமிட்டுள்ளனர். காதலர்கள் தங்கள் ஜோடியை ஸ்பெஷலாக உணர வைக்க பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான நேரம் காதலர்களுக்கு திருவிழா போல இருக்கும். 

ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, காதலர் வாரத்தின் கடைசி 5 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். காதலன் / காதலி மீது காதல் அதிகரிக்கும். காதலர் வாரத்தின் கடைசி 5 நாட்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்
காதலர் வாரத்தின் கடைசி 5 நாட்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். புதிதாக காதலை சொல்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். திருமணம் செய்துகொள்ளும் ஆர்வம் உடையவர்கள் தங்கள் காதலன் / காதலியை பெற்றோருக்கு இப்போது அறிமுகம் செய்தால், அவர்களது சம்மதமும் உடனே கிடைக்கும். திருமணமான தம்பதிகளிடையில் பரஸ்பரம் அன்பு வளரும்.

மேலும் படிக்க | Planets Transit: கும்பத்தில் அஸ்தமிக்கும் குரு இந்த ராசிகளை பாடாய் படுத்துவாரா?

கடகம்
உங்கள் காதல் துணை, இந்த காலத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கலாம். உறவில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் இன்னும் நெருக்கமாவார்கள். இவர்களுக்கிடையே காதல், அன்பு ஆகியவை முன்பை விட அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். காதல் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் காதல் உறவை ஏற்க தயாராவார்கள். புது ஜோடிகளுக்கு அன்பை வெளிப்படுத்த இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு காதலர் வாரத்தின் கடைசி காலம் சிறப்பாக இருக்கும். உங்கள் காதலன் / காதலியுடன் கருத்தியலாக ஒத்துப்போவீர்கள். உறவில் நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இது ஒரு மிக நல்ல நேரமாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் நட்புடன் இருப்பார்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News