காதலர் தினம் மட்டுமல்ல, சில சிறப்பு நாட்களில் திருமணம் செய்தால், விரைவில் மனவாழ்வு முறிந்துவிடும் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒரு திருமணத்தை செய்து முடிக்க 1000 பொய் கூறலாம் எனவும் மூத்த தலைமுறை சொல்வதுண்டு, காரணம் திருமண தம்பதியருக்கு இடையில் எந்த வித விரிசல்களும் வந்துவிட கூடாது என்பதற்காக தான்... ஆனால் தற்போது திருமண தேதியே தம்பதியருக்கு இடையில் உண்டாக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
ஆம்... மெல்பர்ன் பல்கலை கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து சுமார் ஒரு மில்லியன் தம்பதியர்களின் வாழ்வியல் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி முடிவினை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முடிவின் படி.. திருமணம் செய்வதற்கு ஒத்துவராத நாள், காதலர் தினமான பிப்ரவரி 14 தான்!
இந்த காதலர் தினத்தில் திருமணம் செய்துக்கொண்டவர்களில் 11% பேர் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிந்து வாழ தொடங்கிவிடுவதாக புள்ளியியல் தெரிவிக்கின்றது. 21% பேர் திருமனமான 9 ஆண்டுகளில் சட்ட ரீதியாக பிரிவதற்கும் முடிவு செய்துவிடுகின்றனர் என தெரிவிக்கின்றது.
காதலர் தினம் மட்டும் அல்ல, சில சிறப்பு நாட்களும் இந்த மோசமான நாட்கள் பட்டியலில் உள்ளடங்கும். எடுத்துக்காட்டாய் செப்டம்பர் 9, 1999 (9-9-99). இவ்வாறான பேன்ஸி எண்ணில் திருமணம் செய்துக்கொள்ளும் தம்பதிகளின் வாழ்க்கை கேள்விகுறியாக மாறுகிறது என இந்த ஆய்வு உணர்த்துகிறது.
சிறப்பு தினத்தில் திருமணம் செய்துக்கொண்டால், தங்களது திருமண நாளினை அனைவரும் எளிதில் கவனம் வைத்துக்கொள்வர் என பலர் தங்களது திருமணங்களை செய்வதுண்டு. ஆனால் இந்த முடிவு தவறானது என்பதினை இந்த ஆய்வு தெரிவித்துள்ளது!