டூத் பிரஷை மாற்றி பயன்படுத்தினால் HIV பரவுமா? பல் மருத்துவர்கள் சொல்வது என்ன?
நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரஷை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ளலாமா? அப்படி பகிர்ந்து கொண்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sharing toothbrush with partner: நாம் குழந்தைகளாக இருக்கும் போது "பகிர்தல் என்பது நல்லது" என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேட்கிறோம், ஆனால் பல் துலக்குதல் விஷயத்தில் அது உண்மையல்ல! உங்கள் வாழ்க்கை துணை அல்லது நண்பர்களுடன் உங்களது டூத் பிரஷை பகிர்ந்து கொண்டால், அதனை உடனே நிறுத்த வேண்டும். இப்படி ஒரே டூத் பிரஷில் பல் துலக்குதல் உங்கள் இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். ஒவ்வொருவர் வாயிலும் நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் உள்ளன, நீங்கள் டூத் பிரஷை மாற்றி பல் துலக்கும்போது அந்த கிருமிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறீர்கள். நீங்கள் அந்த நபருடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், டூத் பிரஷை மாற்றி கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் படிக்க | யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கவே கூடாது தெரியுமா? உஷாராக இருக்கவும்
நீங்கள் பல் துலக்கும்போது, சில சமயங்களில் டூத் பிரஷ் உங்கள் ஈறுகளை சேதப்படுத்தும் மற்றும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் வேறொருவரின் டூத் பிரஷைபயன்படுத்தினால், அந்த கிருமிகளை பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். 'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ்' என்றழைக்கப்படும் இந்த கெட்ட கிருமிகளில் ஒன்று பல் சொத்தையை உண்டாக்கும் என்றும், இவை டூத் பிரஷ் மூலம் பரவும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பல் டூத் பிரஷை பகிர்ந்துகொள்வது உங்களுக்கு நோய்வாய்ப்படும் அபாயத்தை ஏற்படுத்தும். மற்றவர் பயன்படுத்தும் டூத் பிரஷை பயன்படுத்தினால், நம் வாயில் கிருமிகள் பரவுவதை எளிதாக்கலாம். இந்த கிருமிகள் சில சமயங்களில் நமக்கு இருமல் அல்லது சுவாசிப்பதை கடினமாக்குவது போன்ற நோய்களை உண்டாக்கலாம்.
டூத் பிரஷை மாற்றி பயன்படுத்தும் போது சில கிருமிகள், உமிழ்நீர் மூலம் உங்கள் வாயிலிருந்து உங்கள் துணையின் வாய்க்கு செல்லலாம். இது சளி அல்லது காய்ச்சல் போன்றவற்றால் அவர்களை நோய்வாய்ப்படுத்தலாம். சில சமயங்களில் பல் துலக்கும் போது, உங்கள் ஈறுகளில் சிறிது இரத்தம் வரலாம், அதை நீங்கள் உடனே பார்க்காமல் இருக்கலாம். எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற பிரச்சனை உள்ள நபருடன்டூத் பிரஷை பகிர்ந்துகொள்வது உங்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தும் மற்றும் கிருமிகளை பரப்பக்கூடும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். உங்கள் துணையுடன் டூத் பிரஷை பகிர்ந்துகொள்வது ஒரு இனிமையான விஷயமாக உணரலாம், ஒருவரைப் பற்றி நீங்கள் அக்கறை காட்டுவதற்கு வேறு பல வேடிக்கையான மற்றும் அன்பான வழிகள் உள்ளன.
அதே போல ஒவ்வொருவரும் தங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் மருத்துவரிடம் தவறாமல் செல்வது மிகவும் முக்கியம். உங்கள் பற்களை நன்கு சுத்தம் செய்ய ஃப்ளோஸைப் பயன்படுத்தவும், அடிக்கடி மவுத்வாஷ் பயன்படுத்துவது நல்லது, இது கிருமிகளை விரட்ட உதவும். உங்கள் வாயை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் சொந்த டூத் பிரஷை பயன்படுத்துவது நல்லது. மேலும், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு புதிய டூத் பிரஷை மாற்ற மறக்காதீர்கள். இது உங்களையும் உங்கள் துணையையும் ஆரோக்கியமாகவும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பஸ் டிக்கெட் விலையில் சென்னைக்கு விமானத்தில் பறக்கலாம் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ