பஸ் டிக்கெட் விலையில் சென்னைக்கு விமானத்தில் பறக்கலாம் - முழு விவரம்

பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கும் அரிய சலுகையை டாடா குழுமம் வெளியிட்டுள்ளது.

 

டாடா குழும் வெளியிட்டுள்ள விமான டிக்கெட் சலுகை குறித்த அறிவிப்பின் முழு விவரத்தையும் தெரிந்து கொள்வோம். 

 

1 /7

மிக குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கும் வகையில், டாடா குழுமம் விமான டிக்கெட் சலுகை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

2 /7

Limited Time Flash Sale என வெளியிடப்பட்டிருக்கும் இந்த சலுகையில் எக்ஸ்பிரஸ் லைட் டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ரூ. 932 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

3 /7

செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த விமான டிக்கெட் விற்பனை சலுகையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

4 /7

அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான பயண திட்டத்துக்கு இந்த சலுகை பொருந்தும். அதாவது மார்ச் 31, 2025 தேதி வரை நீங்கள் உங்கள் பயணத்தை திட்டமிட்டு இந்த டிக்கெட் சலுகையை உபயோகித்துக் கொள்ளலாம். 

5 /7

Airindiaexpress.com, மொபைல் ஆப்ஸ் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். எந்தவித வசதிக் கட்டணமும் இல்லை   

6 /7

அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட் விலை ரூ.1088 முதல் முன்பதிவு செய்யலாம். டெல்லி-குவாலியர், கொச்சி-பெங்களூரு, பெங்களூர்-சென்னை வழித்தடங்களில் இந்த சலுகை பொருந்தும். 

7 /7

இதுதவிர, இண்டிகோ, விஸ்தாரா, ஸ்டார் ஏர், ஆகாஷா போன்ற நிறுவனங்களும் குறைந்த செல்வதற்கான சலுகை விலை விமான டிக்கெட் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.