Sitting Lifestyle : இப்போதெல்லாம் ஆஃபீஸ் வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிவிட்டனர். அதனால், அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும், மணிக்கணக்கில் அசையாமல் நாற்காலியில் உட்காரும் வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். ஆனால், இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய கேடு என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைகின்றன. இது பின்னர் பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலுவலகத்தில் மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பது எப்படி இன்று சாதாரண விஷயமாகிவிட்டதோ, அதனைப்போலவே வீட்டுக்கு வந்த பிறகும் உட்கார்ந்திருப்பதையே செய்கின்றனர். ஆய்வுகளின்படி, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகுவலியை ஏற்படுத்தும். நீண்ட நேரம் ஒரே தோரணையில் அமர்வதால் முதுகுத்தண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும். அந்தவகையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.


நீண்ட நேரம் ஏற்படும் முக்கிய தீமைகள்


எடை அதிகரிப்பு


ஒரே இடத்தில் ஒரு பொஷிஷனில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் நமது உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுவது குறைகிறது. இது படிப்படியாக எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் பருமன் பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.


மேலும் படிக்க | Break Up : காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர...ஈசியான 8 வழிகள்


சர்க்கரை நோய்


நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடலில் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது படிப்படியாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது.


இதய நோய்


ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் இரத்த ஓட்டம் குறைகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உட்கார்ந்திருப்பதால் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.


 புற்றுநோய்


நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


எலும்புகள் மற்றும் தசைகள் பலவீனம்


நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் எலும்புகள் மற்றும் தசைகளின் இயக்கம் குறைகிறது. இதனால் அவை பலவீனமடைகின்றன. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்ப்பது எப்படி?


இந்த உட்கார்ந்த வாழ்க்கை முறை (sedentary lifestyle) உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனால், எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், இதய நோய், மற்றும் பல நோய்கள் ஏற்படும் என்பதை அறிந்திருப்பீர்கள். எனவே, உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்ப்பது எப்படி என தெரிந்து கொள்வதும் அவசியம். 


1. இடைவேளைகளை பயன்படுத்துங்கள்


நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல், இடையிடையே சிறிய இடைவேளைகளை பயன்படுத்துங்கள். 30 முதல் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து, குறைந்தது 5 நிமிடங்கள் நடந்து வாருங்கள். இது தசைகள் மற்றும் எலும்புகளை இயக்கத்தில் வைத்திருக்க உதவும்.


2. உடற்பயிற்சியை அதிகரிக்கவும்
அதிக நேரம் அமர்ந்திருப்பதை குறைத்து, குறைந்தபட்சம் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா, நடைபயிற்சி, உடற்பயிற்சி, ஜிம்மில் பயிற்சி போன்றவை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.


3. அலாரம் வைக்கவும்
தினமும் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை கண்காணிக்க, உங்கள் மொபைலில் அல்லது கடிகாரத்தில் அறிகுறிகள் அமைக்கலாம். இது நிச்சயமாக உடல் இயக்கத்தை அதிகரிக்க உதவும்.


4. வீட்டு வேலைகளை செய்யவும்
வீட்டில் இருக்கும்போது, சில வேலைகளை செய்து உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். வீடு சுத்தம் செய்வது, சமைப்பது, தோட்டம் பண்ணுவது போன்றவை உடலை இயக்கத்தில் வைத்திருக்கும்.


மேலும் படிக்க | அதிகரிக்கும் விவகாரத்திற்கு இது தான் காரணம்! இந்த தவறை செய்ய வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ