Break Up : காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர...ஈசியான 8 வழிகள்!

Break Up : பலருக்கு காதல் தோல்வி என்பது, தாங்க முடியாத வலியை கொடுக்கலாம். இதனால், அதிலிருந்து மீள முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். அவர்கள், எப்படி மூவ்-ஆன் ஆக வேண்டும் தெரியுமா? 

Break Up : காதல் என்பது அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை, கிடைப்பவர்களுக்கெல்லாம் காதல் நிலைத்து விடுவதில்லை. அப்படி ஒரு காதல் நிலைக்காமல் கையை நழுவி போகும் போது, சம்பந்தப்பட்ட நபர்களில் யாரேனும் ஒருவர் மிகவும் பாதிக்கப்படுவார். அல்லது, இருவரும் அதிகமாக பாதிக்கப்படுவர். அவர்கள், எப்படி இந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரலாம்? இதோ அதற்கான டிப்ஸ்! 

1 /8

துக்கத்தை எதிர்கொள்ளுதல்: உங்கள் ஆயுள் முழுவதும் வரும் என நினைத்த ஒரு விஷயம், உங்கள் கையில் ஒரு நாள் இல்லாமல் போகும் போது துக்கம், சோகம் வருவது மிகவும் சகஜம்.  ஒரு உறவை இழக்கும் போது அப்படிப்பட்ட உணர்வுகள் அவ்வப்போது வந்து போகத்தான் செய்யும். அது போன்ற உணர்வுகளை தள்ளிப்போடாமல், அதை முழுமையாக உணர வேண்டும். அப்போதுதான் உங்களால் புண்பட்ட உங்கள் மனதை ஆற்ற முடியும். 

2 /8

உங்களுக்கு ஆதரவாக இருக்கும் நபர்களிடம் உங்கள் கஷ்டங்களை சொல்லலாம், அழக்கூட செய்யலாம். அதில் தவறே இல்லை. அவர் உங்களது நம்பிக்கைக்குரிய நபராக இருக்கலாம், நண்பரகாவும் இருக்கலாம். இதனால், உங்களை தனிமை உணர்வு வாட்டாமல் இருக்கும். 

3 /8

ஆக்டிவாக இருங்கள்: உங்கள் உடலுக்கு உழைப்பு கொடுக்கும் நடவடிக்கைகளை செய்து கொண்டே இருங்கள். உடற்பயிற்சி, யோகா, விளையாட்டுகள் என ஏதாவது ஒரு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். 

4 /8

பிடித்த நடவடிக்கைகள்: நீங்கள் அந்த காதலில் இருக்கும் போது, உங்களால் உங்களுக்கு பிடித்த நடவடிக்கைகளுக்கான நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திருக்கும். இப்போது அதற்காக நேரம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த விஷயங்களை, பிடித்தது போல செய்யுங்கள். 

5 /8

புதிய இலக்குகள்: உங்களது எதிர்காலத்தில், என்னென்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதை பட்டியலிடுங்கள், பின்னர் அதை ஒவ்வொன்றாக முடிக்க திட்டமிடுங்கள். இந்த முயற்சியை பிறருக்காக அல்லாமல், உங்களுக்காக எடுங்கள். 

6 /8

தொடர்பை நிறுத்தி கொள்ளுதல்: பல சமயங்களில், காதல் பிரேக் அப்பில் இருந்து மீள முடியாததற்கு காரணம், நீங்கள் உங்கள் Ex-உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இருக்கலாம். எனவே, அவருடனான தொடர்பை முழுமையாக நிறுத்திக்கொள்வது உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் நல்லது. 

7 /8

கற்றல் என்ன? இந்த உறவும், பிரிவும் உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் என்ன என்பதை நீங்கள் நன்றாக உணர வேண்டும்.. அப்படி இல்லை என்றால், தொடர்ந்து இந்த உறவில் செய்த தவறையே வேறு ஏதேனும் ஒரு உறவில் செய்வீர்கள். 

8 /8

ஆலோசனை: ஒரு சில நேரங்களில், மன நல ஆலோசகரின் உதவை தேவைப்படும். எனவே, உங்களுக்கு நீங்கள் பிரேக்-அப்பில் இருந்து மீள முடியவில்லை என்ற உணர்வு இருந்தால், அது போன்ற மனநல ஆலோசகரை பார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்.