விவசாயிகளே! ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இதை அப்டேட் செய்யுங்கள்
பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கீழ் eKYC அப்டேட் செய்வதற்காகன காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
PM Kisan Scheme eKYC: பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் e-KYC செய்ய வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில், திட்டத்தின் அடுத்த தவணை அனுப்பப்படாது. இந்நிலையில், PM Kisan Yojana திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான eKYC அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. PM கிசான் யோஜனா இணையதளத்தில் உள்ள அப்டேட்டின்படி, இப்போது விவசாயிகள் 31 ஆகஸ்ட் 2022 வரை e-KYC ஐ முடிக்க முடியும். முன்னதாக இந்த காலக்கெடு ஜூலை 31 வரை மட்டுமே வழங்கப்பட்டது. இது தவிர, இந்த வேலையை ஆஃப்லைனில் செய்ய விரும்பினால், csc மையத்திற்குச் சென்று செய்யலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளின் கணக்கில் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையும் நான்கு மாத இடைவெளியில் வெளியிடப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 11 தவணை விடுவிக்கப்பட்டு, 12வது தவணை வர உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகள் இ-கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயம். இல்லையெனில், திட்டத்தின் அடுத்த தவணை அனுப்பப்படாது.
e-KYC எங்கே செய்யலாம்?
நீங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற விரும்பினால் மற்றும் e-KYC அப்டேட் செய்ய விரும்பினால், நீங்கள் அதை இரண்டு வழிகளில் முடிக்கலாம். eKYC ஐ முடிக்க, PMKISAN போர்ட்டலில் அரசாங்கம் இந்த வசதியை வழங்கியுள்ளது. அங்கு பதிவு செய்த விவசாயிகள் eKYC செய்யலாம். இதேபோல் பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்காக நீங்கள் அருகிலுள்ள CSC மையங்களை அணுகலாம். அனைத்து PMKISAN பயனாளிகளுக்கும் eKYC க்கான காலக்கெடு 31 ஆகஸ்ட் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!
ஆன்லைனில் eKYC செய்வது எப்படி?
* முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
* இங்கே EKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
* அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
* அனைத்து விவரங்களையும் கொடுத்த பிறகு, உங்கள் e-KYC முடிக்கப்படும்.
* eKYC முடிந்ததும் உங்களுக்கு SMS மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
e-KYC ஏன் அவசியம்?
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் e-KYC ஐப் புதுப்பிப்பது மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. e-KYC ஐ முடிக்கவில்லை என்றால் அடுத்த தவணை உங்களுக்கு கிடைக்காது. தகுதியற்ற விவசாயிகள் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க, மோசடியைத் தடுக்கும் வகையில் இ-கேஒய்சி செயல்முறை இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | RRB Railway Group D: ரயில்வே குரூப் D ஹால் டிக்கெட் வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ