RRB Railway Group D: ரயில்வே குரூப் D ஹால் டிக்கெட் வெளியீடு

Group D Admit Card: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) குரூப் டி அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2022 அன்று குரூப் டி தேர்வுக்கு வரவிருக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (ஆர்ஆர்பி) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 13, 2022, 05:59 PM IST
  • ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு எப்போது
  • கேள்வித்தாள் எப்படி இருக்கும்?
  • அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யப்படும் எளிதான செயல்முறை.
RRB Railway Group D: ரயில்வே குரூப் D ஹால் டிக்கெட் வெளியீடு title=

ஆர்ஆர்பி ரயில்வே குரூப் டி 2022: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) குரூப் டி முதல் கட்ட ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. குரூப் டி முதல் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 17, 2022 அன்று நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின்  (ஆர்ஆர்பி) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பதாரர்களுக்கு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி தேவைப்படும்.

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு எப்போது 
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு 17 ஆகஸ்ட் 2022 முதல் ஆகஸ்ட் 25, 2022 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. எந்த நாளில் விண்ணப்பதாரர் தேர்வெழுத வேண்டும். அதன் தகவல் ஏற்கனவே ஆர்ஆர்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் தேர்வு எந்தத் தேதியில் நடக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அதைச் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்

கேள்வித்தாள் எப்படி இருக்கும்? 
இந்தத் தாளில், பொது அறிவியல், கணிதம், பொது நுண்ணறிவு, பகுத்தறிவு மற்றும் நடப்பு விவகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் 90 நிமிடங்கள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் இருக்கும். அதேசமயம் தவறான பதிலுக்கு 33 சதவீத மதிப்பெண்கள் குறைக்கப்படும். இது தவிர, ஒரு தகுதித் தாள் இருக்கும். இதில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஓபிசி மற்றும் எஸ்சி பிரிவினர் 30 சதவீதமும், எஸ்டி பிரிவினர் 35 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.  

அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யப்படும் எளிதான செயல்முறை.
1- rrbcdg.gov.in என்கிற இணையதளத்திற்குச் செல்லவும் 
2- முகப்புப் பக்கத்தில் சிபிடி முதல் கட்ட ஹால் டிக்கெட்டின் ஆப்ஷனை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும். 
3- புதிய பக்கம் திறக்கும். இங்கே விண்ணப்பதாரர் தங்களின் சரியான தகவலை நிரப்ப வேண்டும், அதன் பிறகு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். 
4- இங்கே உங்கள் அட்மிட் கார்டு வரும். நீங்கள் அதை பதிவிறக்கம் செய்யலாம். 
5- நீங்கள் அட்மிட் கார்டின் ஹார்ட் காபியை வைத்திருக்க வேண்டும், அதாவது ஒரிஜினல் பிரிண்ட் அவுட்.

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News